இந்தியாவில், அந்நிய நேரடி முதலீட்டிற்கான தடைகள் அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.

ஐ.நா மாநாட்டில் பங்கேற்க, 5 நாள்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி, நியூயார்க் நகரில், முன்னணி நிறுவன ங்களின், தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துபேசினார்.

அப்போது, ஆயுள்காப்பீடு, ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைகளில், அந்நிய நேரடி முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தபடும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்தியாவில் வேளாண் துறையிலும், சுகாதாரத் துறையிலும், ஆயுள் காப்பீடுகளுக்கு உள்ள லாபத்தை அளித்தரும் சிறப்பான எதிர் காலம் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி களிடம் விளக்கினார்.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில், ஊடகம், தொழில்நுட்பம், தகவல்பறிமாற்றம் ஆகியவை வளர்ச்சியுறும் கதை என்ற தலைப்பில், மீடியா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஜாம்பவான்களோடு பிரதமர் மோடி உரையாடினார்.

வட்ட மேஜை கூட்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், ஊடக உலகின் ஜாம்பவான் என்று அழைக்கபடும் ரூபர்ட் முர்டோக் பங்கேற்று, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Leave a Reply