அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களைப் பாஜக நியமித்துள்ளது. அதற்கான அறிவிப்பை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை வெளியிட்டார்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் பணிகளைப் பாஜக அண்மையில் தொடங்கியது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை (செப்.21) கமலாலயத்தில் நடைபெற்றது.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்துவது குறித்தும், தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரு தேர்தல் பொறுப்பாளர் வீதம் 234 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பொறுப்பாளர்கள் போன்று மாநில அளவில் 38 தேர்தல் பொறுப்புக் குழுக்களையும் பாஜக அமைத்துள்ளது. அதேபோன்று ஒரு லட்சம் தொண்டர்களுக்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கான பயிற்சி அளிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

Tags:

Leave a Reply