சென்றவாரம், அரசு வசம் இருந்த நேதாஜி பற்றிய 64 ஆவணங்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பகிரங்கமாக வெளியிட்டு விட்டார். அந்த ஆவணங்களில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியா விட்டாலும், இத்தனை ஆண்டுகள், ஆட்சியில் இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த ஆவணங்களை வெளியிடவிடாமல் காங்., கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் தடுத்தது ஏன்; நேதாஜியின் குடும்பத்தாரை தொடர்ந்து கண் காணித்தது ஏன்; எதற்கு காங்கிரஸ் ., பயப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் ., எப்போதும் பதில் அளித்த தில்லை. எனவே, நமக்கு தோன்றுவதைத்தான் நாம் சொல்லவேண்டி உள்ளது.

மற்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் வெளி நாடுகளிலயே நேதாஜி இருக்குமாறு நேரு பார்த்துக் கொண்டார். ஏனெனில், இந்தியாவில் நேருவுக்கு போட்டியாக வரக் கூடிய தலைவர் நேதாஜிமட்டுமே. காங்கிரசையும் ஆட்சியில் இருந்து அகற்ற கூடிய திறமைபெற்றவர் அவர்.

சீனபோருக்கு முன்பே 1962 தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், நேதாஜி மட்டும் பிரதமராகி இருந்தால், இந்தியா மீது சீனா போ் தொடுத்திருக்குமா என கேட்கத்தோன்றுகிறது.

வேண்டுமென்றே நேதாஜி வெளிநாடுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டார் என்றால், அவர் எங்கே இருந்தார்? அவரை ஒளித்துவைக்கவும் முடியுமா? அவரும் ஒளிய கூடியவர் அல்ல. அப்படியானால் அவர் இருந்தது எங்கே?

இதற்கான பதில், நேதாஜி பற்றிய ஆவணங்களில் நிச்சயம் இருக்கும். ஆனால், அவரைப்பற்றிய முக்கியமான ஆவணம் ஒன்று, மேற்குவங்கத்தில் சித்தார்த்த சங்கர்ரே காங்கிரஸ்., முதல்வராக இருந்த போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா. இவர்சொல்படி அப்படியே ஆடியவர்தான் சித்தார்த். எனவே, இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

இதாவது பரவாயில்லை, மேற்குவங்கத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இவர்களின் கூட்டணி கட்சிதான் பார்வர்டுபிளாக். இக்கட்சியை ஆரம்பித்தவரே நேதாஜிதான். அக்கட்சி எவ்வளவுதான் அழுத்தம் கொடுத்த போதும், ஆவணங்களை வெளியிட காங்., அனுமதிக்கவில்லை. ஆக, கம்யூனிஸ்ட் கூட்டணியும் நேதாஜி பற்றிய ரகசியங்களை ஏன் மறைத்தது என்ற அடுத்தகேள்வி எழுகிறது.

சிலர், நேதாஜியை பிரிட்டன் சிறை பிடித்து வைத்திருந்தது என்கிறார்கள். இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பிரிட்டன் ஒரு ஜனநாயக நாடு. அங்கு, ஒருதலைவரை யாருக்கும் தெரியாமல் வைக்க முடியாது. கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்த சோவியத் யூனியனில் நேதாஜி அடைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்கிறார்கள். அதுவும், அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எது எப்படியோ, நேதாஜி விஷயத்தில் காங்கிரஸ் கட்சி அச்சத்திலேயே உள்ளது தெளிவாகிறது.

நன்றி; எம்.ஜே.அக்பர்

Tags:

Leave a Reply