பேஸ்புக் வரலாற்றில் இந்தியா மிகவும் முக்கியமானது என்று பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் ஜூகர்பெர்க் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கா சென்றுஉள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் ஜூகர்பெர்க் இடையிலான சந்திப்பு பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை யகத்தில் நடைபெற்றது. ஜூகர்பெர்க் கூறுகையில், பேஸ்புக் வரலாற்றில் இந்தியா மிகவும் முக்கியமானது . இந்தியா அறிவின் ஆலயம் , பேஸ்புக் நிறுவனமானது மிகவும் கடினமான நிலையை சந்தித்த போது, இந்தியா தனக்கு உத்வேகம் அளித்தது . தனிப்பட்ட முறையில், பல் வேறு காரணங்களுக்காக இந்தியாவை பற்றி எனக்கு உற்சாகம் உள்ளது.

பேஸ்புக் வரலாற்றில் இந்தியா மிகவும் முக்கியமானது . பேஸ்புக் நிறுவனமானது மிகவும் கடினமான நிலையைநோக்கி சென்றது, என்னுடைய நிறுவனத்தை விற்பனைசெய்யும் நிலைக்கு சென்றேன், அப்போது என்னுடைய குரு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுமான ஸ்டீவ் ஜோப்ஸை சந்தித்தேன். அவர் என்னை இந்தியாவில் உள்ள கோவிலுக்கு செல்ல கேட்டுக்கொண்டார்.

"எனவே நான் இந்தியாவில் கோவில்களுக்கு சென்றேன்," இந்த பயண மானது பேஸ்புக் நிறுவனத்தை, பலபில்லியன் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற தனது நம்பிக்கையை மிகவும் வலுப்படுத்தியது. எந்த ஒரு தொழிலையும் செய்வதற்கு முன்னதாக கோவிலுக்குசெல்வது ஒரு ஐடியா,

முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில் ஜூகர்பெர்க் கதையை கேட்பதில் உலக மக்கள் மிகவும் அதிரச்சி அடைந்து இருக்கலாம், இந்தியாவில் உள்ள கோவிலில் நீங்கள் உத்வேகம் பெற்று உள்ளரீகள் என்பதில்.

இந்தியாவில் மிகவும் அதிகமான நம்பிக்கையானது உள்ளது. நீங்கள் இந்தியாவையை ஒருகோவிலாக நினைத்து நம்பிக்கையுடன் வாருங்கள். உங்களுடைய அனுபவமானது நம்பிக்கையை காட்டும். இது இந்தியாவிற்கும் மிக சிறப்பானது.

இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் மிகப் பெரிய அளவில் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிர்வாகம் எளிமையாகவும் திறமையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுகிறது.

பணத்தை எங்கே முதலீடுசெய்வது என்று தெரியாமல் தவிக்கும் நாடுகளை இந்தியாவில் முதலீடுசெய்ய அழைக்கிறேன்.

முதலீட்டாளர்களின் சொர்கமாக இந்தியா விளங்குகிறது, தற்போது 8 லட்சம்கோடி டாலராக உள்ள இந்திய பொருளாதாரத்தை 20 லட்சம்கோடி டாலர் அளவிற்கு உயர்த்துவதே தமது இலக்கு.

உலகத்தை இணைக்கும் ஒருவரை பெற்றதற்காக மார்க் சக்கர் பெர்க்கின் பெற்றோருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக பிரதமர் மோடி, கூறினார்.

கூட்டத்தில் இருந்த அவர்களை தான் காண வேண்டும் என ஆசைப்பட்டமோடி, எழுந்து நிற்குமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார்…

அவர்களும் நெகிழ்ச்சியோடும், புன்சிரிப்போடும் கூடியிருந்தோரின் கைத்தட்டலுக்கு மத்தியில் எழுந்து நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.