நியூயார்க் நகரில் நடை பெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கசென்ற பிரதமர் நரேந்திர மோடி கலிபோர்னியாவின் சான்ஜோஸில் அமெரிக்க ஐடி. நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை (சி.இ.ஓ) சந்தித்துபேசினார்.

அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்தியரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பேஸ்புக் அதிபர் மார்க்சக்கர் பெர்க் ஆதரவளிப்பதாக தெரிவித்தார். மேலும், கிராம புறங்களை இண்டர் நெட்டால் இணைக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் புரொபைல் பிக்சரையும் மாற்றியிருக்கிறார்.

பேஸ்புக்கில் அவரை பின்தொடர்பவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிக்கு மாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்துடன் சக்கர்பெர்க்கின் ஸ்மைல் செய்யும் போட்டோ புரொபைல் பிக்சராக மாற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக் அதிபரின் ஆதரவை வரவே ற்றுள்ள பிரதமர் மோடி தனது பேஸ்புக் பக்கத்திலும் அதேபோன்று புரொபைல் பிக்சரை மாற்றியுள்ளார்.

Leave a Reply