அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் உள்ள சாப் சென்டரில் அங்குவாழும் இந்தியர்களை சந்தித்தார்.அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

. ஒன்று தீவிரவாதம் மற்றும் உலக வெப்பமய மாதல் என்ற 2 முக்கிய சவால்களை உலகம் தற்போது எதிர்கொள்கிறது.தீவிரத்தத்தில் நல்லதுகெட்டது என்பது இல்லை.தீவிரவாதம் என்பது தீவிரவாதமே.எந்த சவால்களையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.

தீவிரவாதப் பிரச்சினையில் ஐநா. சபை சற்று நிதானமாக செயல் படுவது ஆபத்தானது. தீவிரவாதத்தை வேரறுக்க உறுதியான செயல் பாட்டை வரையறை செய்யவேண்டும் ஐ.நா.தீவிரவாதத்தை வளர்த்துவிடும், ஆதரிக்கும் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டால், நம்மால் மனித குலத்தை காப்பாற்ற முடியாது. தீவிரவாதம் எப்போதுமே தீவிரவாதம் தான், அபாயகரமானதுதான். அதில் நல்லது , தீயது என்று பாகுபாடு இல்லை.

1993ம் ஆண்டு நான் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் பேசும்வாய்ப்பு கிடைத்தபோது, இந்தியா தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கபட்டிருப்பதாக கூறினேன். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. மாறாக சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்சினை என்று தான் சொன்னார்கள்.

ஆனால் 2001ல் தீவிரவாதிகளால் அமெரிக்கா தாக்கப்பட்ட போதுதான், தீவிரவாதம் குறித்த தனது நிலையை மாற்றிக்கொண்டது அமெரிக்கா. எனது நாடு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.தீவிரவாதம் எங்கும்தாக்கலாம், யாரையும் தாக்கலாம். இதை உலகம் உணரவேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படவேண்டியது உலகத்தின் கடமையாகும்.

சர்வதேசளவில் தீவிரவாதம் குறித்த பிரச்சினையை நான் தொடர்ந்து எழுப்புவேன். காரணம், தீவிர வாதத்தை எந்த காரணத்தைக் கொண்டும் ஏற்கமுடியாது.70வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஐ.நா. தீவிரவாதத்திற்கு எதிராக நாடுகளை திரட்டவேண்டும். உலகம் அமைதியாக திகழ தீவிரவாதத்தை வேரறுக்க அது ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.புத்தரும், காந்தியும் அவதரித்த பூமியிலிருந்து வந்துள்ளேன். இருவரும் அமைதியின் சின்னங்களாக திகழ்பவர்கள். உலகமும் அமைதியில்வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply