"நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்திருந்தது. ஒருவர் ரூ.50 கோடி சம்பாதித்தார், ஒருவரது மகன் ரூ.250 கோடி சம்பாதித்தார், மகள் ரூ.500 கோடி சம்பாதித்தார், மருமகன் ரூ.1,000 கோடி சம்பாதித்தார்.

ஆனால், பாஜக இப்போது ஊழலற்ற ஆட்சி கலாச் சாரத்தை உருவாக்கியுள்ளது. நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். என் மீது யாராவது ஏதாவது ஒரு ஊழல் குற்றச் சாட்டாவது சொல்ல முடியுமா?" (அரங்கில் "இல்லை" என்ற பெரிய சப்தத்தை மக்கள் எழுப்புகின்றனர்)

"கடந்த ஆட்சியில் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டனர். ஆனால் இன்று இந்தியாவுக்கு உலகரங்கில் ஒரு புதிய அடையாளம் இருக்கிறது. இதற்குக்காரணம், உங்களது விரல்செய்த வித்தை. உங்கள் விருப்பம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

21-ம் நூற்றாண்டு யாருடையது என்ற பேச்சு உலகளவில் பரவலாக பேசப்படுகிறது. அதற்கு பலரும், 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதே என பதில் கூறுகின்றனர்.

16 மாத ஆட்சி காலத்திற்குப்பிறகு இன்று உங்கள் முன்நிற்கும் நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேனா என்று நீங்களே சொல்ல வேண்டும். ('ஆம்' என்ற பெரும் ஓசை அரங்கத்தில் ஒலிக்கிறது).

நான் ஒவ்வொரு முறை இந்தியா முன்னேறும் என்று கூறும்போதெல்லாம், பலரும் என்னிடம் கேட்கின்றனர்? எந்த நம்பிக்கையில் இதைக் கூறுகிறீர்கள் என்று?

இந்திய மக்கள் தொகையில் 65% பேர் 35 வயது மதிக்கத்தக்கவர்கள். அதாவது இளம் வயதினர். இந்தியாவின் இளமையே எனக்கு இந்த நம்பிக்கையை அளிக்கிறது என நான் அவர்களிடம் கூறுகிறேன்.

மேலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறிவருகிறது. உலகவங்கி அறிக்கை, மூடிஸ் வர்த்தக அமைப்பு அறிக்கை போன்ற பல்வேறு அமைப்புகளின் பொருளாதார ஆய்வறிக்கைகளும் இந்திய பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது"

"ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பபுரட்சி அவசியம். அதை கருத்தில்கொண்டே டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பெரும் பாலான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இ-கவர்னன்ஸ் முறையும் சிறப்பாக செயல் படுகிறது"

"இந்த உலகம் இரண்டு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. ஒன்று தீவிரவாதம்; மற்றொன்று பருவநிலை மாற்றம். இந்த இரண்டையும் திறம்படசமாளிக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். தீவிரவாதம் என்றால் என்ன என்பதற்கே ஐ.நா. இன்னமும் முழுமையான விளக்கமளிக்க வில்லை.

ஒரு விளக்கத்துக்கே 15 ஆண்டுகள் எடுத்துக்கொண்டால் அதற்கான தீர்வுகாண எத்தனை ஆண்டுகள் ஆகும். நல்ல தீவிரவாதம், கெட்டதீவிரவாதம் என்ற பேதம் ஏதும் இல்லை. தீவிரவாதம் மக்கள் நலனுக்கு அச்சுறுத்தலே. காந்தியும், புத்தரும் பிறந்தமண்ணில் இருந்து வரும் நான், உலக அமைதி உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரில் உள்ள எஸ்.ஏ.பி. மையத்தில் அமெரிக்கா வாழ் இந்திய மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது ,

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.