6 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, தனது சுற்றுப் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். சிலிக்கான் வாலி பயணத்தை நிறைவுசெய்து நியூயார்க் சென்ற பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஒபா மாவை சந்தித்தார்.

மோடியை சந்தித்ததும் கட்டிப் பிடித்து உற்சாக வரவேற்பை ஒபாமா அளித்தார். இந்த சந்திப்பின்போது, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒராண்டில் ஒபாமாவை மூன்றாவது முறையாக நரேந்திரமோடி சந்தித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விவாதிக்கப்பட்ட அம்சங்களை கட்டமைக்க மோடி – ஒபாமாவின் தற்போதைய சந்திப்பு ஒருவாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply