உலகத்தையே இன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் Facebookகின் தலைவர் மார்க் ஷூக்கர்பெர்க், நம் மோடியிடம் சொல்கிறார்: "நான் இதுவரை இதை யாரிடமும் வெளியில் சொன்னதில்லை..! Facebook ஆரம்பித்த சில வருடங்களில் எனக்கு பிரச்சனைகள் வந்தன..! Facebookகை வாங்கி விட பெரிய நிறுவனங்கள் முயன்றன..! என மனதில் பெரிய குழப்பம் ஏற்பட்டது ..! ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார்:

அவருக்கும் இது போல் ஒரு மனநிலை இருந்தபோது, அவர் இந்தியாவிற்கு சென்றதாவும், அங்கே அவர், ஒரு கோவிலுக்கு சென்றபோது அவருக்கு நல்ல INSPIRATIONனும் CLARITYயும் கிடைத்தது என்று..! அப்போது நானும் இந்தியா வந்தேன்…! அங்கே ஒரு கோவிலுக்கு சென்றேன்…! Somehow, அங்கே எனக்கு மனதில் ஒரு CLARITY, தெளிவு கிடைத்தது..! இதோ இப்போது Facebook இவ்வளவு பெரிய கம்பனியாக வளர்ந்திருக்கிறது..!!"

எனக்கு, தி.ஜானகிராமனின் 'மோகமுள்'ளில், ஜமுனா, தனக்கும் பாபுவிற்கும் உண்டான உறவு சரியா தவறா, தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறி, பெரிய மனக் குழப்பத்தில் தவித்து, பாபுவிடம் : "நாம் கோயில்களுக்கு போவோம்..! அங்கே என் மனதில் என்ன தெளிவு வருகிறதோ அதையே முடிவாய்க் கொள்வோம்..!" என்று சொல்வது ஞாபகம் வந்தது..!

நம் கோயில்களில், 'ஹா……' வென்று பெரிதாய் விரிந்திருக்கும் பிரகார வெளியும், ஓங்கியிருக்கும் அதன் சுற்றுப்புற சுவர்களும், நடுவில் நிற்கும் ஸ்தூபியும், அங்கு வீசும் கற்பூர, விபூதி, பூக்களின் கலவை நறுமணமும் இனம் புரியா ஒரு நிறைவான உணர்வை ஏற்படுத்தும்..! அவை, ஏதும் இல்லாதவருக்குக் கூட எல்லாம் கிடைத்தது போன்ற ஒரு மனநிறைவை கொடுக்க வல்லவை..! எந்த இடம் நமக்கு அப்படி ஒரு உணர்வை கொடுக்க வல்லதோ, அதுதான் கோவில்..! அந்த மன நிலையில் தான், நம் குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும்,..! கோவில்கள் பல உருவாக்கப்பட்டதும் இதற்காகத்தான் இருக்கும்..! அந்த உணர்வை உள் வாங்காமல், நாமோ மற்ற விஷயங்களில் பரபரப்பாகிறோம்..!!

கும்பகோணம் ராமசாமி கோயில், சுவாமிமலையின் இரண்டு அடுக்கு சுற்றுப் பிரகாரம், ஆடுதுறை சூரியனார் கோயில், இன்னும் இது போன்ற பல கோயில்களின் நீண்ட, விரிந்த பிரகாரத்தில் நடக்கும் போது நானும் இதை உணர்ந்திருக்கிறேன்..! மார்க், 'INSPIRATION, CLARITY' கிடைத்தது என்று சொல்கிறார்…! நாம் அதைத்தான் 'BLESSINGS' என்று சொல்கிறோம்..!

நம் கோவில்களின் உண்மையான தாத்பரியத்தை, வெளிநாட்டவன் சொல்கிறான்..! பெரிய பொக்கிஷங்களை வைத்துக் கொண்டு, நாமோ…..?
குறைந்தபட்சம், கோவிலின் மதில் சுவர் மேல் ஒண்ணுக்கு அடிக்காமல் இருப்போம்…!

COURTESY Shankar Rajarathnam

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.