ஐ.நா.சபை பொதுக் கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப்பும் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் நியூயார்க்கில் ஒரே ஓட்டலில் தான் தங்கியுள்ளனர். இருந்தாலும் இருவரும் அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தும் பேசிக்கொள்ளவில்லை. ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி முதலில்வந்தார். அவரது வரிசையில் ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ கபே, பிரான்ஸ் மற்றும் இந்தோனேசியா நாட்டு தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.

பிரதமர் மோடியும், நவாஸ்செரிப்பும் எதிர் எதிரே அமர்ந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேரம் கண்டு கொள்ளாமல் இருந்தனர். கூட்டம்தொடங்க இருந்த சிறிதுநேரத்துக்கு முன்பு நவாஸ்செரீப் பிரதமர் மோடியை பார்த்து சிரித்துக் கொண்டே கையசைத்தார்.உடனே பிரதமர் மோடியும் நவாஸ் செரிப்பை பார்த்து பதிலுக்கு கையசைத்தார்.அவரது கையசைப்பை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக சிரித்துகொண்டே தலையை அசைத்தார். மேலும் இருவரும் உரை நிகழ்த்தி முடித்ததும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:

Leave a Reply