பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு மே மாதம் பதவி ஏற்றபிறகு அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கு சென்று ஒப்பந்தகளை செய்துவந்தார். கடந்த 16 மாதங்களில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் போல முந்தைய பிரதமர்கள் யாரும் சென்றதில்லை என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

''மோடியின் வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு என்னபலன் கிடைத்தது?'' என்று நேற்று கூட டெல்லி முதல் – மந்திரி கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார். இந்த விமர்சனங்கள் அனைத்துக்கும் லண்டனில் இருந்து வெளியாகும் ''பைனான் சியல் டைம்ஸ்'' பத்திரிகையில் வெளியாகி இருக்கும் ''அன்னிய முதலீடு'' தொடர்பான புள்ளி விபரதகவல் விடையளிப்பதாக அமைந்துள்ளது.

உலகில் ஒவ்வொரு நாடும் பெறும் வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய ஆய்வில், நடப்பு 2015–ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தைப்பிடித்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் இந்தியாவுக்கு 31 பில்லியன் டாலர் அன்னியமுதலீடு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த 6 மாதங்களில் இந்தியாவுக்கு 47 சதவீதம் கூடுதல் வெளிநாடு முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மேற் கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மூலமாக இந்த முதலீடுகள் வந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இது வரை அமெரிக்காவும், சீனாவும்தான் கடந்த பல ஆண்டுகளாக முதன்மை இடங்களில் இருந்தன. இந்தநாடுகளில் உள்கட்டமைப்பு மிக, மிக சிறப்பாக இருப்பதால் உலகின் பெரிய நிறுவனங்கள் அனைத்தும், இந்த இருநாடுகளையே முதலீடுகள் செய்ய தேர்வுசெய்தன.

இந்நிலையில் இந்தியா அன்னிய முதலீட்டை பெறுவதில் முதலீடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா 28 பில்லியன் டாலர், அமெரிக்கா 27 பில்லியன் டாலர்களுடன் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

சென்ற ஆண்டு (2014) வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 5–வது இடத்தில் இருந்தது. பிரதமர் மோடியின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக இந்தியா இன்று முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் இடத்துக்கு உயர்ந்துள்ளது.

சீனாவில் தற்போது பொருளாதாரதேக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்துவரும் நாட்களில் சீனாவின் தடுமாற்றம் இந்தியாவுக்கு மேலும் பொருளாதார சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவில் வரிக் கொள்கை, தொழிலாளர் கொள்கைகளில் மாற்றம் செய்தால் இந்தியா விரைவான வளர்ச்சியை எட்டும் என கருதப்படுகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் சிலிக் கான் வேலிக்கு சென்றிருந்தபோது, இந்தியாவை நவீனமாக்கும் திட்டங்களில் கையெழுத்திட்டார். இது இந்திய பொருளா தாரத்தை மேம்படுத்தும் என்று உலக தொழில் நுட்பத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.