இட ஒதுக்கீட்டு கொள்கையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என பாஜக தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் உரையாற்றியவர், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதீஷ் குமார், ஆட்சி – அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பிறரைவஞ்சிக்கும் வழக்கம் கொண்டவர்.

நிதீஷ் குமாருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டûஸ அவர் ஏமாற்றினார். இப்போது ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் எங்குள்ளார்? முக்கியத்துவம் இல்லாத வகையில் அவர் புறக்கணிக்கபட்டு விட்டார்.

அதேபோல பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியையும் நிதீஷ் வஞ்சித்தார். தேசிய ஜனநாய கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கபட்டது. ஆனால், அங்கிருந்து விலகி தற்போது லாலுபிரசாத்துடன் கைகோர்த்து கூட்டணி அமைத்துள்ளார்.

இவ்வாறு பிறரது முதுகில் குத்து வதையே வாடிக்கையாக அவர் கொண்டுள்ளார். தன்னை சோஷலிஸவாதி என பிரகடனப்படுத்தி கொள்ளும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தலைவர் லாலு பிரசாத்துக்கு அவரது குடும்பநலனே முக்கியமானது.

பிகார் பேரவை தேர்தலில், தனதுமகனின் தொகுதியிலிருந்துதான் அவர் பிரசாரத்தை தொடங்கினார். தற்போது நடை முறையில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கையை பாஜக ஆதரிக்கிறது . எனவே இடஒதுக்கீட்டு கொள்கையை பாஜக ஒரு போதும் மாற்றாது . இந்த விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தும் மக்களை திசைத் திருப்புகிறார்கள் என்றார்

Leave a Reply