அயோத்தியில் கடந்த 1992-ஆண்டு, பாபர்மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக் குரிய இடத்தை, ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு கையகபடுத்த வேண்டும் என்று விசுவஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அந்த அமைப்பின் தலைவர் அசோக் சிங்கல், வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலின்போது, பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த படி, ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கவேண்டும். எனினும், சர்ச்சைக்குரிய இந்தவிவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

ராமர்கோயில் கட்டுவதற்காக இடம் ஒதுக்கவேண்டும் என்றும், பாபர்மசூதியை வேறு இடத்தில் கட்டுவதற்கு நிலம் வழங்கபடும் என்றும், பாபர்மசூதியின் பாரம்பரிய கண் காணிப்பாளருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, சுப்ரமணியன் சுவாமி மேலும் கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக் குரிய அந்த இடத்தில் ராமர்கோயில் இருந்தது நிரூபிக்கப்பட்டால், ஹிந்து அமைப்பினரின் கோரிக்கைக்கு ஆதரவுதரப்படும் என்று உச்ச நீதி மன்றத்தில், கடந்த 1994-ம் ஆண்டு, அப்போதைய மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அந்த இடத்தில் ராமர்கோயில் இருந்தது என பல்வேறு அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ராமர்கோயில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன். இதற்காக, பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளேன். பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ராமர்கோயில் கட்டும் விவகாரத்தை மீண்டும் கையிலெடுப்பேன் என்றார் அவர்.

Leave a Reply