அரசியல் நாகரிகம் கெட்டுப் போய்விட்டது என்பதைவிட அதனுடன் நாம் ஒத்து போய்விட்டேம் என்பது தான் வருத்தமான விசயம். காமராஜர் வளர்ச்சியைப் பற்றி பேசுவதைத் தவிர வேறு எதையும் பற்றி பேசமாட்டார். இப்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி அதை செய்கிறார். ஆனால் தமிழக கழக அரசியவரதிகள் தங்களை எதிர்த்து அரசியல் செய்வோரை ஏசுவதை தவிற வேறு எதுவும் பேசுவதில்லை.

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் அனந்த நாயகியின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கருணாநிதி நாடாவை உருவி பாவாடை நிக்கி என்றேல்லாம் அசிங்கமாக பேசினார். அவருடைய ஆரம்பகால மேடைப் பேச்சுகள் இன்னும் கேவலமானவை ஆனால் அவரைத்தான் பலர் தமிழன தலைவர் என்கிறார்கள்.

வணங்குவது தமிழன் பண்பாடுதான், ஆனால் தமிழக அமைச்சர்களெல்லாம் ராமாயண கூனி போல வளைந்துகுனிந்து முதல்வர் ஜெயலலிதவை . வணங்குகிறரர்கள் . ஆனால் ஜெயலலிதா பதிலுக்கு அப்படி வணங்குவதில்லை. தனக்கு அடிமை போல் செயல்படுவோரை மட்டுமே அமைச்சர்களாக வைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது

.ஆலோசனை தருபவர்கள் தான் அமைச்சர்கள் ஆனால் இங்கு அடிமைகளே அமைச்சர்களாக உள்ளனர் இதுமிகப்பெரிய அரசியல் அநாகரிகமாகும் . ஒருவரை கட்சியிலிருந்து எந்த காரணத்தையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் கட்சியின் கொள்கைக்குமாறாக செயல்பட்டார் என சொல்லி நிக்கி விடுகிறார் கட்சியின் தலைவர் கூடவே ஒரு குறிப்பு வெளியிடப்படுகிறது .
நிக்கப்பட்ட அந்த நபரை கட்சியினர் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது, சந்திக்கக் கூடாது, இதுதான் அந்த குறிப்பு .

கட்சியிலிருந்து நிக்கப்பட்டவரை கட்சியினர் சந்திக்கக் கூடாதா? ஆம் சந்திக்கக்கூடாது தனது சொந்த மகன் எதிர்கட்சியில் இருந்தால் கூட தந்தையும் மகனும் சந்திக்ககூடாது இது தான் கழக அரசியல் விதி .தமிழகத்தை பொறுத்த மட்டில் இங்கே எதிரிகளும் எதிரிகளும் அரசியல் செய்கிறார்கள். ஒட்டு லாபத்திற்காகளும் சில நேரங்களில் ஒரு எதிரி இன்னெரரு எதிரியேரடு சேர்ந்துக் கொள்வரர்.

ஆனரல் அகில இந்திய ஆரசியல் அப்படி அல்ல நாடாளுமன்ற சபாநாயகர் பா.ஜ க வின் சுமித்ர்ர மகஜன் காங்கிரஸ் தலைவி சோனியாவை கட்டித்தழவிக் கொள்கிறரர் .
தன்னை கடுமையாக விமர்சிக்கும் நிதிஷ் குமாருடன் பிரதமர் மகிழ்ச்சியுடன் உரையடுகிறரர் தேசிய அரசியலில் எதிர்க்ட்சியினராக விளங்கும் லாலு மற்றும் முலாயம் சிங் திருமண நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு அன்பு பாரட்டினார் ராகுலுக்கும் அரவிந்து கெஜிரிவாலுக்கும் பிறந்து நாள் வாழ்த்து தெரிவிகிறார் பிரதமர்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஏன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்  கொள்ளக்கூடாது. பிறந்த நாள் கொண்டாடும் விஜயகாந்தை  ஜெயலலிதா பாராட்டவேண்டும் காரணம் அவர் எதிர்கட்சி தலைவர் அல்லவா கூட்டணியாக போட்டியிட்டவரும் கூட.   சோனியா ராகுலை பிரதமர் வாழ்த்துகிறாரே .

நாட்டுக்காக அரசியல் ஈடுபட்டுள்லோம் என்னும் பொதுவான கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து கட்சியினரிடமும்  இணக்கம் வேண்டும்  தமிழத்தைப் பொறுத்தமட்டில் கழக அரசியல் வாதிகள் நாட்டுக்காக அரசியலில் ஈடுபடவில்லை அவர்கள் தங்களின் வீட்டுக்காக மட்டுமே அரசியல் செய்கிறார்கள்.

நிதிஷ்குமாரோடு  சிரித்து உறவாடிய பிரதமர், சோனியாவுக்கும் ராகுலுக்கும் கெஜிரிவாலுக்கும் வாழ்த்து சொன்ன பிரதமர் அரசு பயணமாக  தமிழகம் வந்த போது  தமிழக முதல்வரை சந்தித்து உரையாடியது பிரதமரைப் பொறுத்தமட்டில்  சாதாரண நிகழ்ச்சிதான் அவரின் வழக்கமான அரசியல் நாகரீக செயல்பாடு அது .

பிரதமர் முதல்வர் சந்திப்பைக் கூட அரசியல் கொச்சைப்படுத்தும் அளவுக்கு தமிழக அரசியல்வரதிகள்  அரசியல் அநாகரிகத்தேரடு ஒன்றிப் போய்  உள்ளனர்

குற்ற நடவடிக்கைகளிலேயே பழகிப்போன இவர்களுக்கு சரியான நடவடிக்கை குற்றமாக படுகிறது .

இந்த சந்திப்பை கொச்சைப் படுத்திப் பேசிய  காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஈ.வே.ரா.வின் பேரன் என்பதை நாம் மறக்கக்கூடாது தமிழகத்தில்  கடவுள் சிலைகளை கேவலப்படுத்தி அநாகரிகத்திற்கு வித்திட்டவரே  ஈ.வே.ரா தானே .

தமிழத்தில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டும் போதாது அரசியல் மாற்றம் தேவை. தமிழகம் தேசிய அரசியலுக்கு திரும்ப வேண்டும் அதிகமாக ஒட்டுவாங்கிய முதல்வரும் குறைவாக ஒட்டு வாங்கி எதிர்க்ட்சிதலைவராக இருப்பவரும் தாம்  வாங்கிய வாக்குகள் நாட்டுக்கு சேவை செய்யத்தான் என உணர்ந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ந்து நாட்டின்  வளர்ச்சி குறித்து ஆலோசிக்கும் காலம் வரவேண்டும் அதற்கு ஆரம்பமாக  தமிழகத்தில் பா.ஜ க  ஆட்சிக்கு வர வேண்டும்

நன்றி ; ஒரேநாடு

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.