உலகின் சுற்றுச் சூழல் மாசடைவதற்கு இந்தியா எந்த விதத்திலும் காரணமாக இருந்தது இல்லை என்பதை, 125 கோடி இந்திய மக்களின் சார்பாக, உலக நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்துவதில் இந்தியா தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், குந்திமாவட்ட கோர்ட் மற்றும் கலெக்டர் அலுவலகங்களின் மொட்டை மாடியில், 180 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பை துவக்கிவைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் சுற்றுச் சூழல் மாசடைவதற்கு இந்தியா எந்தவிதத்திலும் காரணமாக இருந்த தில்லை என்பதை உலக நாடுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். எனினும், சுற்றுச் சூழல் மாசடைவதை கட்டுப்படுத்துவதில் இந்தியா தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நமது கலாசாரம், பாரம் பரியம் மற்றும் முன்னோர்கள் ஒரு போதும், இயற்கையை சுரண்ட வும், இயற்கை வளங்களை சீரழிக்கவும் அனுமதித்ததில்லை.

பிறநாடுகள் செய்த தவறுகளுக்காக, மனிதகுலம் நிம்மதியாக இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக, சுற்றுச்சூழல் பாதிப்பை சீரமைக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது.நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத குஜராத்திலோ அல்லது ராஜஸ் தானிலோ, சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்றால் பரவாயில்லை.நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்த ஜார்க்கண்ட்டில், சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது உண்மையில் சிறப்பானது. இதன் மூலம், உலகிற்கு திடமானசெய்தியாக, நாம் சுற்றுச் சூழலுக்கு ஆதரவானவர்கள்; இயற்கைவளத்தை கெடுப்பவர்கள் இல்லை என்ற செய்தியை அளிக்கிறோம்.

Leave a Reply