முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேரன் நேற்று பாஜவில் இணைந்தார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அண்ணன் மகன் சேக் சலீம். இவர், கடந்த 28ம் தேதி டெல்லியில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பாஜவில் இணைய போவதாக தெரிவித்தார். இதைத்

தொடர்ந்து சேக் சலீம் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ெஜய்சங்கர், ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அப்போது, சேக் சலீம் அளித்த பேட்டியில், "முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார். அப்துல் கலாம் கனவை பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் என்னால் ஆனதை செய்வேன்" என்றார். பாஜ தலைவர் தமிழிசை கூறுகையில், " கட்சியின் வளர்ச்சிக்கு எந்தெந்தவழியில் பயன்படுத்த முடியுமோ, அந்தவழியில் சேக் சலீம் பயன்படுத்தபடுவார். அவரை கட்சியில் முழுமையாக பயன்படுத்திகொள்ளும் வகையில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்" என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.