பாகிஸ்தான் அரசு முதலில் தீவிரவாதத்தை கைவிடவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் சில நாட்களுக்கு முன்புபேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். இப்பிரச்சினைக்கு தீர்வு காண 4 யோசனைகளை அவர் முன்வைத்தார்.

இதுதொடர்பாக ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண 4 அம்ச திட்டங்கள் தேவை யில்லை. ஒரு அம்ச திட்டம் இருந் தால் மட்டும் போதும். பாகிஸ்தான் அரசு முதலில் தீவிரவாத நட வடிக்கைகளை கைவிடவேண்டும்.

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதம் மூலம் மறைமுக போரை பாகிஸ்தான் நடத்திவருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ் பூர் மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். சர்வதேச சமூகம் எச்சரித்தும் பாகிஸ் தான் திருந்தவில்லை.

அண்மையில் பாகிஸ்தானில் இருந்து காஷ் மீருக்குள் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். இதேபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

சுமார் மூன்று கண்டங்களில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரியா, இராக், லிபியா உள்ளிட்ட நாடுகளின் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

உலகளாவிய அளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அலட்சியமாக செயல்படுகிறது. இதற்கு ஒரேதீர்வு. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்யவேண்டும். அப்போதுதான் உலக நாடுகளில் அமைதியை பேணிக்காக்க முடியும். ஐ.நா. சபையின் முடிவெடுக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவேண்டும்.

1945-ம் ஆண்டு நடை முறையி லேயே ஐ.நா. சபை செயல்பட்டு வருகிறது. அப்போது உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் 2015-ம் ஆண்டுக்கு எவ்வாறு பொருந்தும்? ஆப்பிரிக்க கண்டம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் ஓர் உறுப்பினர் கூட இல்லை. இது எந்தவகையில் நியாயம்?

ஐ.நா. அமைதிப் படையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்தியத்தரப்பில் ஒருலட்சத்து 80 ஆயிரம் வீரர்கள் அமைதி படையில் பணியாற்றி வருகின்றனர். 161 இந்திய வீரர்கள் பணியின் போது உயிர் நீத்துள்ளனர் இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.