கடந்த, 50 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட தமிழகவரலாற்றை எழுதுவதற்கு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது,'' சென்னையை, தமிழகத்திற்கு மீட்டுகொடுக்க மிகப்பெரிய போராட்டம் நடத்தியவர், ம.பொ.சி., அவரது நினைவை தமிழக மக்கள் போற்ற வேண்டும்; ஆனால், அவரது குடும்பத்தார் மட்டுமே நினைவு கூர்கின்றனர், இந்த நிலை மாற வேண்டும்.

தமிழகத்தின் சுதந்திர போராட்ட தியாகவரலாறு, வட இந்தியாவை எட்ட வில்லை. கடந்த, 50 ஆண்டுகளாக தமிழக வரலாறு மறைக்கப்பட்டே உள்ளது. தமிழகத்தின் தியாக வரலாற்றை, நாடுமுழுவதும் பதிப்பிக்கும் புதிய அத்தியாயம் தற்போது துவங்கியுள்ளது. திருவள்ளுவரை நாடு முழுவதும் நினைவுகூரும் செயலை, பிரதமர் மோடி தான் மேற்கொண்டுள்ளார். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, டில்லியில், ஜனாதிபதி மாளிகையில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அவருக்கு பின், அங்கிருந்த திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு, தற்போது, அது காட்சிபொருளாக வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலையை, ஜனாதிபதி மாளிகையில் மீண்டும் நிறுவுவது எங்களுடைய முக்கியபணியாகும். ஜாதி, மதம், மொழி கடந்து, தமிழனின் வரலாற்றை புதுப்பிப்போம்.

ம.பொ.சி., விருது வழங்கி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது

Tags:

Leave a Reply