குறிப்பிட்ட அளவுக்குமேல் பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு பான்கார்டை (நிரந்தர கணக்கு எண்) கட்டாயமாக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- வருமான வரித் துறையை வலிமையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக விரைவில், குறிப்பிட்ட அளவுக்குமேல் பண பரிவர்த்தனைகள் செய்தால் பான்கார்டு கட்டாயம் என்ற விதி அமல் படுத்தப்படும். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய அளவிளான கருப்புபணம் இந்தியாவிலேயே உள்ளது. பிளாஸ்டிக் மின்னுணு அட்டைகளை பயன் படுத்துவதை கட்டாயமாகவும், ரொக்கமாக பண பரிவர்த்தனைகள் செய்வதை விதி விலக்காவும் மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கணக்கில் வராதாபணத்தை வெளிக்கொணரவும் வரிவிகிதங்களை நியாயமான முறையில் மேற்கொள்ளவும் அரசு கடமைப்பட்டுள்ளது.

அரசு அளித்த ஒற்றைச் சாளர சலுகையைப் பயன்படுத்தி, கருப்புப் பணம் குறித்து தகவல் அளித்தவர்கள், கருப்புப் பணத் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் நிம்மதியாக தூங்கலாம்.

ஆனால், வெளிநாடுகளில் தாங்கள் பதுக்கியுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் அளிக்காதவர்கள் சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்கள். தாங்கள் பதுக்கியுள்ள கருப்புப்பணத்தின் அளவில் 30 சதவீத வரியும், 90 சதவீத அபராதமும் செலுத்தநேரிடும்.

அத்துடன், கருப்புப்பணம் பதுக்கியவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கு கருப்பு பணம் பறந்துசெல்வது கருப்புப் பணத் தடுப்புச்சட்டத்தின் கீழ் இனி தடுக்கப்படும் என்றார் ஜேட்லி.

Leave a Reply