தாத்ரி சம்பவத்தை அரசியல் ஆக்கவேண்டாம் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் இடையே நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ''தாத்ரி சம்பவம், துரதிர்ஷ்ட வசமானது. இதற்கு மதச்சாயம் பூசுவது சரியல்ல'' ''இந்த சம்பவத்தை அரசியல் ஆக்கவேண்டாம்'' எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உள்ளூர் எம்.பி.யும், மத்திய கலாசாரதுறை மந்திரியுமான மகேஷ் சர்மா, ''இது ஒரு விபத்து. இது திட்டமிடப்பட்ட கொலை அல்ல'' என கூறினார்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஊர்க்காவல் படைவீரர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே விஷால், சிவம் என்னும் இருவர், கோவிலில் வலுக் கட்டாயமாக அறிவிப்பு வெளியிட வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் உள்ளூர் பாஜக தலைவர் மகன் என தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை உள்ளூர் பாஜக தலைவர் ஹரிஷ் தாக்குர் மறுத்துள்ளார்.

Leave a Reply