தாத்ரி போன்றசம்பவம் இந்தியாவின் புகழுக்கு நல்லதல்ல என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், தாத்ரி போன்ற சம்பவங்கள் இந்தியாவின் புகழுக்கு நல்லதல்ல . இது போன்ற சம்பவங்கள் நாட்டின் நிலையை காயப்படுத்தி விட்டது. "இந்தியா பக்குவப்பட்ட சமுதாயத்தை கொண்டது. நாட்டை பொறுத்த வரையில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பு நாட்டிற்கு நல்லபெயரை கொடுக்காது," என்று அருண் ஜெட்லி கூறிஉள்ளார். தாத்ரி சம்பவம் துரதிஷ்டவசமானது என்று கூறிஉள்ள அருண் ஜெட்லி கண்டனத்தையும் பதிவுசெய்து உள்ளார்.

Tags:

Leave a Reply