பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவந்தால் பசுவதைக்கு தடை விதிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பிகார் சட்டப்பேரவைக்கு விரைவில் நடை பெறவுள்ள தேர்தலானது, மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கும், மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்க வலியுறுத்துவோருக்கும் இடையேயான நேரிடையான போட்டியாகும்.

பிகார் சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று, மாநிலத்தில் ஆட்சியமைத்தால், பசுவதைக்கு முழுவதும் தடைவிதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதைக்கு ஏற்கெனவே தடை விதிக்கபட்டுள்ளன. அதேபோல், பிகாரிலும் 14 வயதுக்கும் குறைவான பசுக்களை வதைசெய்வதற்கு தடை விதிக்கும் சட்டம் உள்ளது. ஆனால், அந்த சட்டத்தை பிகாரில் ஆட்சியிலிருந்த அரசுகள் செயல்படுத்தவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்கள்மூலமாக, பிகாரின் சோனேபூருக்கு பசுக்கள் கொண்டு வரபடுகின்றன. பின்னர், அஸ்ஸாம் மற்றும் பிற வட கிழக்கு மாநிலங்கள் வழியாக அண்டை நாடுகளுக்கு வதை செய்யப்படுவதற்காக பசுக்கள் கொண்டு செல்லபடுகின்றன என்று அந்த அறிக்கையில் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply