காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன்னர் 56 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வெளிநாடு ஒன்றுக்கு சென்று ஓய்வெடுக்க சென்றார். ஆனால் அந்த கால கட்டத்திற்கு அவர் எம்.பி்.க்கான மாத ஊதியம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் பெற்றுள்ளார்.

சாதாரண அரசு ஊழியர்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி 56 நாட்கள் விடுப்புஎடுத்தால் அவர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என்ற நிலை இருக்கும்போது காந்திகுடும்ப வாரிசு என்பதால் அவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதா . இந்த 56 நாட்களில் ராகுல்காந்தி அவை நடவடிக்கைகள் எதிலும் கலந்து கொள்ள வில்லை என்பது அப்பட்டமான உண்மை. அவர் அவைக்கு வந்ததாக கையெழுத்து எதுவும் போடாதநிலையில் மாதசம்பளமான ரூ.50 ஆயிரம் மற்றும் இதரபடிகள் அவருக்கு ஏன் வழங்கப்பட்டது.

அரசு கஜனாவில் இருந்து ஊதியம்பெறுவதாக ராகுல் காந்தி தாம் விடுப்பு எடுக்கப் போவது குறித்து மக்களவை தலைவருக்குகூட தெரிவிக்காதது பெரியகுற்றம் . மக்கள் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தி சொல்லாமல் கொள்ளமால் விடுமுறையில் போனாலும் ஊதியத்தை மட்டும் தவறாமல் பெற்றுக் கொள்வதை நியாப்படுத்த முடியாது.

நன்றி ஆர்கனைசர்

Leave a Reply