இந்திய சூரியசக்தி மின் திட்டங்களுக்கு, ஜெர்மனி நிதி உதவிசெய்ய உள்ளதால், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, மத்திய அரசிடமிருந்து, 1,000 கோடி ரூபாய் நிதி கிடைப்பது
உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம், காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, முழுவதும் பயன் படுத்த, 'கிரீன்காரிடார்' என்ற பெயரில், பசுமை மின்வழித்தடம் அமைக்க முடிவுசெய்தது. இத்திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி; விருதுநகர் மாவட்டம், திருச் சுழியில் நவீன துணை மின் நிலையங்கள் மற்றும் மின்வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.இரண்டாவது கட்டமாக, புதுக் கோட்டை மற்றும் திருச்சியில், 400 கிலோவோல்ட் திறன்கொண்ட துணைமின் நிலையங்கள் அமைக்க, மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்ககோரி, மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், சிலதினங்களுக்கு முன் டில்லி வந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தியாவில், சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களுக்கு, 7,400 கோடி ரூபாய் கொடுக்க, ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இதனால், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு மின் வாரியத்திற்கு நிதி உதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது.

Tags:

Leave a Reply