பீகார் சட்ட சபைக்கு வரும் 12, 16, 28, நவம்பர் 1, 5–ந் தேதிகளில் 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. .பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் பீகாரில் உள்ள 243 தொகுதிகளிலும் இரு அணிகளுக்கும் இடையில் நேரடிபோட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளில் வரும் சனிக் கிழமையுடன் (10–ந்தேதி) பிரசாரம் ஓய உள்ளது. இதை யடுத்து முதல்கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் உச்சக் கட்ட பிரசாரம் நடந்துவருகிறது.

பாஜக.வுக்கு ஆதரவுதிரட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக் கிழமை) தேர்தல் களத்தில் குதித்தார். இன்று காலை அவர் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பீகார் சென்றார்.

முன்கர் நகரில் அவர் தன் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி சமஸ்தி நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்த பிரசாரத்தின் போது நிதீஷ்குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார். ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் சோனி யாவையும் மோடி கடுமையாக தாக்கிப்பேசினார்.

இன்று பிற்பகல் நவதா தொகுதியில் பேசுகிறார். பிறகு மாலை பெகு சாரை நகரில் பிரதமர் மோடி தனது பிரசாரத்தை நிறைவுசெய்கிறார்.

நான்கு ஊர்களிலும் பேசி முடித்தபிறகு பிரதமர் மோடி பாட்னா செல்கிறார். இன்றிரவு பாட்னாவில மோடி தங்கி இருக்க உள்ளார். அப்போது பீகார் தேர்தல்பணிகள் குறித்து பாஜக. மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

அடுத்த கட்டமாக வேறு எந்தெந்த நகரங்களுக்கு சென்று பேசவேண்டும் என்றும் பீகார் மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆய்வு நடத்த உள்ளார். நாளையும் பிரதமர் பீகாரில் 2–வது நாளாக பிரசாரம் செய்ய உள்ளார்.

நாளை (வெள்ளிக்கிழமை) அவுரங்காபாத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட உள்ளார். சசராம் நகரில் நடைபெற உள்ள பிரமாண்ட கூட்டத்திலும் பேச உள்ளார்.

10–ந் தேதியும் பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடகூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

பிரதமர் மோடி இன்று பீகாரில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அம்மாநில தேர்தல் பிரசாரத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 8 இடங்களில் பேசுவதுபோல ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கு முன்பும், தலா 8 கூட்டங்களில் கலந்துகொண்டு பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். எனவே அடுத்தமாதம் 5–ந்தேதி பீகாரில் தேர்தல் முடியும் முன்பு குறைந்தபட்சம் 40 முதல் 45 கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிவிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பீகாரில் ஏற்கனவே மூத்த மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின்கட்காரி உள்பட 8 மத்திய மந்திரிகள் தீவிர தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரும் வர உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.