கூட்டணி தர்மத்தை பாமக. பின்பற்ற வில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உண்மையான, மதச் சார்பற்ற கட்சிகளின் கூட்டணிதான் அமைய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் பாரதீய ஜனதா இல்லாத வெற்றிபெறும் அணியோடு கூட்டணி அமைக்கப் போவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கூறியிருக்கிறார்.

நாங்கள் மனிதநேய மக்கள் கட்சியை கூட்டுசேர்க்க விரும்பவில்லை. அந்த கட்சி இருக்குமா? உடையுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

வைகோ தலைமை யிலான மக்கள் நலகூட்டு இயக்கத்தால் தமிழ்நாட்டில் எந்த ஒருமாற்றத்தையும் கொண்டுவர முடியாது. திராவிட கட்சிகளுக்கு மாற்று அணியாக பாஜக தலைமையிலான அணிதான் உள்ளது.

மத்தியில் மட்டும் எங்கள் கூட்டணியில் இருப்பதாக பாமக.வினர் சொல்கின்றனர். கூட்டணியில் இருந்துகொண்டு தன்னிச்சையாக முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ம.க. அறிவித்தது தவறு. இதில் கூட்டணி தர்மத்தை பாமக. பின்பற்ற வில்லை.

மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு திட்டம்போல, முதல்-அமைச்சர் படத்தை மட்டும் போட்டு விளம்பரப்படுத்தி உள்ளனர். பிரதமர் படத்தை போடாதது வருத்ததுக் குரியது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு கூடுதல் நிதி வேண்டும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். கல்விக்கு பிரதமர் மோடி எதிரானவர் கிடையாது. தேவையான நிதி உதவிகளை வழங்குவார்.

வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டியக்க அணி தேர்தல் வரும் வரைகூட நீடிக்காது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டியக்கத்தில் இருந்து காந்திய மக்கள் இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை வெளியேறிவிட்டன. இருக்கும் நான்கு கட்சிகளும் எப்போது விலகுவார்கள் என்பது தெரியாது. தேர்தல் வரும் வரை கூட இந்த அணி நீடிக்காது. மக்கள் நலக் கூட்டியக்கத்தால் எந்த மாற் றத்தையும் ஏற்படுத்த முடியாது.

அன்புமணியை முதல்வர் வேட் பாளராக ஏற்றால் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள் ளார். தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு, அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது.

Leave a Reply