தமிழகத்தில் 2016–ல் நடை பெறும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க தயாராக உள்ளது. 234 தொகுதிகளுக்கும் பா.ஜ.க.,வில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாற்றுச் சக்தியாக பா.ஜ.க உருவெடுத்து வருகிறது. வரும் தேர்தலில் பா.ஜ,க கூட்டணிதான் வெற்றி பெறும்.

பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் வருகைதர உள்ளனர். அவர்கள் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இன்னும் 30 நாளில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாராகி விடும். தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் அதிமுக. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. தமிழக அரசுக்கு, மத்திய அரசு போதிய நிதிஉதவியை அளித்து கொண்டுதான் இருக்கிறது.

ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு பா.ஜ.க ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். ஆனால் பள்ளிகளை மூடி விட்டு போராட்டம் நடத்துவது தேவையற்றது.

அதிமுக ஆட்சி யில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. தமிழக அரசுக்கு, மத்திய அரசு போதிய நிதி உதவியை அளித்துவருகிறது. தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளதால், பாஜக அணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள்.

ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது.

Leave a Reply