பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை தொடங்காமல் இருப்பதற்கு அந்நாட்டின் நடவடிக்கைகளே காரணம் பாகிஸ்தான் அவ்வப்போது பிரச்னைகளை எழுப்பிவருகிறது. ஒருவேளை, உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து தங்கள் நாட்டுமக்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடலாம்.

“நாம் நமது நண்பர்களை மாற்றி கொள்ளலாம், ஆனால், அண்டைவீட்டாரை மாற்ற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் அடிக்கடி கூறுவார். இதற்கேற்ப, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற நாள்முதல், அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்துதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

மோடியின் பதவிப் பிரமாண நிகழ்ச்சிக்கு அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்ததே இதற்கு சிறந்த உதாரணம். அண்டை நாடுகளுடன் நாம் நட்புக்கரம் மட்டும் நீட்ட வில்லை; இதயங்களும் சந்திக்க வேண்டுமென விரும்புகிறோம்.

உள்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு, 5 இந்தியர்களை பாகிஸ்தான் படையினர் கொன்று விட்டதாக, ஒருநாள் தொலைபேசியில் எல்லைப் பாதுகாப்புப்படை இயக்குநர் என்னிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, நமது படையினர் வெள்ளைக் கொடியை அசைத்துள்ளனர்.

நமது மக்களை பாகிஸ்தான் படையினர் கொல்லும் போது, நம்மால் அமைதியாக இருந்துவிட முடியாது. எனவே, நமது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி விட்டு, “பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுங்கள்; ஆனால் முதல் துப்பாக்கிச்சூடு நம் தரப்பில் இருந்து இருக்கக் கூடாது’ என்று நமது படையினரிடம் கூறினேன்.

அதன்பிறகு, நமது படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஐ.நா.விடம் பாகிஸ்தான் தஞ்சம் அடைந்தது. வடகிழக்கு பிராந்தியத்தை பொருத்த வரை, தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. நக்ஸல் தீவிரவாதமும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. உள்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு, ஆயுதங்களுடன் சரணடைந்து பேச்சு வார்த்தை நடத்துமாறு நக்ஸல்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் அதைச் செய்ய வில்லை.

ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து வங்க தேசத்துக்கு 13 லட்சம் பசுக்கள் கடத்தப்பட்டு வந்தன. நமது அதிரடி நடவடிக் கையால், கடத்தப்படும் பசுக்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக குறைந்துள்ளது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

Leave a Reply