நேபாளத்தில் புதிய அரசியல்சாசனம் உருவாக்கப் பட்டதால் பிரதமராக இருந்த சுஷில் கொய் ராலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதனை யடுத்து இன்று பாராளு மன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதியபிரதமர் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில், பெருன்பான்மை வாக்குகள் பெற்று ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கேபி. சர்மா ஒளி அந்நாட்டின் புதியபிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், புதியபிரதமராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள கேபி.சர்மா ஒலிக்கு, பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு மோடி வாழ்த்து தெரிவித்ததாக, பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் இணை யத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தனது உரையாடலின் போது, இந்தியாவிற்கு வருகைதருமாறு நேபாள பிரதமர் கே.பி.சர்மாவுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாக அந்தசெய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply