சீனாவை கண்காணிக்க களம் அமைத்த இந்தியா…

தென் சீன கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா முடிவுசெய்துள்ளது. அடடே ஆச்சரியமாக இருக்கே என்று நமக்கு வியப்பாக இருக்கும் ஏன்னா, வழக்கமா இந்தியாவைத்தான் மற்ற நாடுகள் கண்காணிக்கும். ஆனால் காலம் மாறி போச்சு. இந்தியா மற்ற நாடுகளை கண் காணிக்க ஆரம்பித்து விட்டது.. ஏன்னா, நடப்பது மோடி ஆட்சியல்லவா. எல்லாம் நடக்கத்தான் செய்யும். சீனாவையும் தென் சீனக்கடலையும் கண்காணிக்க முடிவு செய்த இந்தியா அதற்கு தேர்ந்தெடுத்த நாடு வியட்னாம்..இது தாங்க அரசியல்..

இந்திய பெருங்கடலில் சீனாவின் பட்டுப்பாதைக்கு செக் வைத்து இந்தியப் பெருங்கடல் நாடுகளான செசல்ஸ் மொரீஷியஸ் மற்றும் இலங்கை நாடுகளை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்த மோடி, சீனாவின் பிடிக்குள் சிக்கி விட்ட மாலத்தீவை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

அதே நேரத்தில் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள தென் சீன கடலின் மீதும் கண் வைத்த மோடி அங்குள்ள நாடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பும் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறார்.

உலகில் கடல் வழி போக்குவரத்தின் மூலம் நடைபெறும் வியாபாரத்தில் கிட்டதட்ட பாதியளவு இந்த தென் சீன பெருங்கடலின் வழியாகவே நடந்து வருகிறது.எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதிகளவில் இருக்கும் இந்த ஏரியா முழுவதும் சீனா விற்க்கே சொந்தம் என்று தொடை தட்டி வருகிறது.

சீனா,தைவான், பிலிப்பைன்ஸ் மலேசியா, புருணை, இந்தோனே சியா, சிங்கப்பூர்,வியட்நாம்.மக்காவு மற்றும் கொங்கொ ங் ஆகிய நாடுகளை கொண்டுள்ள இந்த தென் சீன கடல் பசிபிக்
பெருங்கடலோடு சேர்ந்தது.இந்த கடல் பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் நாடான வியட்னாமிற்கும் சீனாவிற்கும் பங்காளி சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையை இந்தியா பயன்படுத்தி கொள்ள முன் வந்துள்ளது.

நாற்பது வருடங்களுக்கு முன்பு உலக வல்லரசான அமெரிக்காவையே கொரில்லா போர் மூலம் துரத்தியடித்து உலக வரலாற்றில் தனி இடத்தை தக்க வைத்துள்ள வியட்னாமில் நின்று கொண்டு சீனாவை இந்தியா வேவு பார்க்க உள்ளது..

நல்லா இருக்குல்ல…40 வருசத்திற்கு முன் அமெரிக்காவை விரட்டியடிக்க எந்த நாடு சிந்தாந்த ரீதியாக துணை நின்றதோ
அந்த நாடான சீனாவை வேவு பார்க்க இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் வியட்னாமில் உள்ள கோ சி மிங் நகரத்தில் செயற்கைக்கோள் கண்காணிப்பு மையம் ஒன்றை நிறுவ உள்ளது.

மேற்கு வியட்னாமில் அமையவுள்ள இந்த அதிநவீன செயற்கை க்கோள் தொடர்பு மற்றும் இமேஜிங் மையத்தின் மூலம்
இந்தியா அனுப்பியுள்ள செயற்கைக்கோள்கள் வழியாக சீனா, தென் சீன கடல் பகுதிகள் உட்பட தெற்காசிய நாடுகளின் நகர்வுகளை இந்த மையத்தின் மூலமாக மிகத்துல்லியமாக பெற்று கண்காணிக்க முடியும்.

வியட்னாமை அடுத்து இந்தோனேசியாவிலும் இதே மாதிரி செயற்கை கோள் கண்காணிப்பு மையத்தை அமைக்க உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...