மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு தார்மிக பொறுப்பேற்று மத்திய உள்துறை_அமைச்சர் ப. சிதம்பரம் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுதியுள்ளார்.
“மும்பையில் குண்டுவெடிப்பில்” அப்பாவி மக்கள் பலியாகியிருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது . இந்தியாவின்
பொருளாதாரத்தலைநகரம் என வர்ணிக்கப்படும் மும்பையில் தொடர்ந்து பயங்கரவாத_தாக்குதல்கள் நடைபெறுவது மத்தியஅரசின் இயலாமையைக்காட்டுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் வெறும் வாக்கு உறுதியோடு நின்றுவிடாமல், செயல் வீரராகவும் இருந்திருந்தால் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாது . கசாப், அப்சல் குரு போன்ற பயங்கரவாதிகள் இன்னும் தூக்கிலிட படாமலே இருப்பதாலேயே தீவிரவாதிகள் இது போன்ற மோசமான சதிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகளிடம் தொடர்ந்து மென்மை போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருவதாலேயே இது போன்ற மோசமான_விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியுள்ளது . இந்த சம்பவத்துக்கு தார்மிகப்பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலகவேண்டும்‘ என பொன். ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.