வெளிநாட்டு கல்வி நிறுவனங் களுடன் இந்திய கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இணைப்பு

பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு வெளிநாட்டு கல்வி நிறுவனங் களுடன் இந்திய கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி கூறினார்.

மேற்குவங்க மாநிலம், நாடியா மாவட்டம், மோகன்பூர் என்ற இடத்தில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுநிறுவனத்தின் 4-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:

நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு நம்நாட்டின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழங்கள் தரமான வெளிநாட்டுக்கல்வி நிறுவனங்களுடன் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. உயர் அங்கீகாரம் பெற்ற இந்திய கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு இணைப்புபெற்ற இந்திய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பட்டப்படிப்புக்கு 2 பருவங்களும் (செமஸ்டர்), பட்ட  மேற்படிப்புக்கு 1 பருவமும் வெளிநாட்டில் படிக்கலாம். இம்மாணவர் களுக்கு பட்டப் படிப்பு சான்றிதழை இந்திய கல்லூரியே வழங்கும். வெளிநாட்டு கல்வி நிறுவனத்துடன் இணைந்து சான்றிதழ் வழங்க அனுமதியில்லை. இந்த சான்றிதழ்களில் வெளிநாட்டு கல்வி நிறுவனத்தின் பெயரும் இடம்பெறாது. இவ்வாறு அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். விழாவில் மொத்தம் 121 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப் பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...