தீவிரவாதம், பிரிவினை வாதத்திற்கு எதிராக மென்மையான அணுகுமுறை என்பதேகிடையாது

தீவிரவா தத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் எச்சரிக்கை காரணமாக அண்டைநாடுகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது என மத்திய  அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 70வது சுதந்திரதினத்தின் போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு ஆதரவாகசெயல்படும் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். தீவிரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது என்றும் அவர் சவால் விடுத்தார்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கேதாமாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு  பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் உறுதியான நடவடிக்கையால், அண்டைநாடுகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி மற்றும் படேலின் கொள்கைகளை பிரதமர் உயர்த்திபிடித்து வருகிறார். தீவிரவாதம், பிரிவினை வாதத்திற்கு எதிராக மென்மையான  அணுகுமுறை என்பதேகிடையாது. இன்றைக்கு தீவிரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தான் சர்வதேச நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர்  மோடியின் தேசியபாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையே இதற்கு முக்கியகாரணம்.  

உலகத்திற்கே இந்தியா தலைமைதாங்கி நடத்துவதற்கான திசையை நோக்கி நாட்டை பிரதமர்மோடி வழிநடத்தி செல்கிறார். ஏழைகளின் மேம்பாடு என்ற காந்தியின்  கொள்கை, தேசத்தின் ஒருமைப்பாடு என்ற படேலின் கொள்கையை ஒன்றாக கொண்டது தான் மோடியின் கொள்கை. பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது  குஜராத்தின் வளர்ச்சி ஒரு மாடலாக தற்போது பேசப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...