'பி.எஸ்.எல்.வி., – சி 35' ராக்கெட், இன்று வெற்றிகரமாக விண்ணில்பாய்ந்தது. வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறியக்கூடிய, அதிநவீன, 'ஸ்கேட்சாட் 1' செயற்கைகோளுடன் இன்று காலை, 9:12 மணிக்கு, 'பி.எஸ்.எல்.வி., – சி 35' ராக்கெட் , ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இதற்கான, 48.30 மணிநேர, 'கவுன்ட்-டவுண்' நேற்று முன்தினம், காலை, 8:42 மணிக்கு துவங்கியது. வானிலை மாற்றம், புயல்சின்னம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய, 'ஸ்கேட் சாட் 1' செயற்கை கோளுடன், அமெரிக்கா, அல்ஜீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளின், எட்டுசெயற்கை கோள்களும், இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள்கள் அடுத்த 5 ஆண்டுகள் சூரியனின் ஒளிவட்ட பாதையில் பயணித்து தனது பணியை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராக்கெட் இரண்டு சுற்று வட்டாரப் பாதைகளில் செயற்கை கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் உள்ள 2 பல்கலைக் கழகங்களின் 2 செயற்கைக் கோள்களும் ராக்கெட்டுடன் செலுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்எல்டி சி-35 ராக்கெட் செலுத்தப்பட்ட 17 வது நிமிடத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள்பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.