மத்திய அரசை அகற்ற நக்சல் சதி

மத்திய அரசை அகற்ற நக்சலைட்கள் செய்தசதி குறித்த ஆதாரங்கள், கைதான அவர்களது ஆதரவாளர்கள் வீட்டில் நடந்த சோதனையில் கிடைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

பிரதமர் மோடியை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலுடன் தொடர்புடையதாக, நக்சலைட் அமைப்பை சேர்ந்த, எழுத்தாளர் வரவரராவ், ஐதராபாதில், கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதி களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில், நக்சலைட் ஆதரவாளர்களான, வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, தொழிற் சங்க தலைவர் சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவாலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 'இந்த ஐந்து பேரையும் செப்., 6 வரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இவர்கள் கைதுசெய்யப்பட்டது தொடர்பாக புனே போலீசார் கூறுகையில், நக்சல்களுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பது தெளிவாக தெரிந்த பின்னரே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மாவோயிஸ்ட்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பை ஆதாரங்கள் தெளிவாக காட்டியது.


சத்தீஸ்கரில் நக்சலைட்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடிகொடுக்க வேண்டும் என நக்சலைட்கள் திட்டமிட்டனர். இதனால் பெரியபாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தனர்.அவர்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கைதானவர்கள் பெரிதும் உதவி செய்தனர். இதில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கும் தொடர்புள்ளது.


ராஜிவ் கொலை போல், பிரதமரை கொல்லவேண்டும் என கடிதம் ஒன்றில் நக்சலைட்கள் கூறியுள்ளனர். கைதானவர்கள் வீட்டில் நடந்தசோதனையில், மத்திய அரசை அகற்ற மாவோயிஸ்ட்கள் செய்தசதி குறித்த ஆதாரங்கள் கிடைத்தன. இவ்வாறு அவர்கள் கூறினர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...