அனைவருக்கும் குறைந்தவிலையில் சிகிச்சை

மதுரைவந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டினார். நெல்லை, மதுரை, தஞ்சாவூரில் மத்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட பல் நோக்கு மருத்துவ மனைகளை திறந்து வைத்தார். தபால் துறை மூலம் 12 பாஸ்போர்ட் சேவை மையங்களையும் துவக்கி வைத்தார்.

மதுரை வந்துள்ள அனை வருக்கும் வணக்கம் என தமிழில் உரையை துவக்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய தாவது:மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்குவந்தது மகிழ்ச்சி. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. சுகாதாரதுறையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைமூலம் காஷ்மீர் முதல் குமரிமுதல் சேர்ந்தவர்களும் பயன் பெறுவார்கள். 1,200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மக்களுக்கு பெரிதும் பலன் தரும். எய்ம்ஸ் அடிக்கல் மற்றும் பல்நோக்கு மருத்துவ மனை திறந்து வைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 4.5 ஆண்டுகளில் மருத்துவபடிப்புகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் குறைந்தவிலையில் சிகிச்சை கிடைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவக்கி வைத்தது வரலாற்று சாதனை. இந்ததிட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குகிறது.

இந்திய மக்களுக்கு, உலகதரத்தில் குறைந்தசெலவில் சிகிச்சை கிடைக்க செய்வதே எங்களின் நோக்கம். தமிழகத்தில், 1,320 சுகாதார நிலையங்களை தமிழகம் செயல் பாட்டிற்கு கொண்டுவந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 2023க்குள் காசநோயை ஒழிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...