தமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வெளியீடு

தமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிட பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்தமாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும்பணி கடந்தவாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

அதில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்த வரையில் 88.57 சதவிகிதமும், மாணவிகள் 93.64 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டளவில் திருப்பூர் 95. 37 சதவிகித தேர்ச்சிபெற்று முதலிடம் பிடித்துள்ளது.

ஈரோடு 95.23 சதவிகித தேர்ச்சிபெற்று இரண்டாம் இடத்திலும், பெரம்பலுர் 95.15 சதவிகித தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேசமயம் 1,281 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன.

மாணவர்கள் இணையதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வுமுடிவை அறியலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வுமுடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

நாளை முதல் 26-ம் தேதிவரை தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 24-ம் தேதிமுதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதவிர மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்பெற மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...