முயற்சியை கைவீடாதீர்கள் ஃப்ரண்ட்ஸ்

நீட்.. தமிழக மாணவர்களின் மருத்துவகனவை பறிக்க வந்ததுஎன்று எதிர் காட்சிகள் போய் பிரச்சாம் செய்துவரும் நிலையில்.. ஏழை எளிய மாணவர்களும் இலவசமாக எளிமையாக மருத்துக்கனவை நனவாக்க கொண்டு வரப்பட்டுள்ள அறிய திட்டம் என்று மக்களே பார்க்கும் ஒரு சூழல் உருவாகி வருகிறது.

2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதினர்.இதில் 59 ஆயிரத்து 785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நேற்றைய தினம் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 ஆம் வகுப்பு தேர்வில் 2 மாணவிகளும் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் மருத்துவ கனவு பறிபோகிவிட்டதாக எண்ணி அவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் மாணவர்கள் ஒருவிஷயத்தை நன்கு மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே. இதை மனதில் கொண்டு நீட் தேர்வில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் சாதித்து காட்டிருக்கிறார் மாற்றுத்திறனாளி மாணவன் கார்வண்ண பிரபு.

நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகளவில் முதல் இடத்தையும், அகில இந்தியஅளவில் 5-வது இடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ள கார்வண்ண பிரபு கரூர் மாவட்டதை சேர்ந்தவர். பிரபுவின் தந்தை ஒருமருத்துவர். தனது தந்தை போல தானும் மருத்துவராக வேண்டும் என்ற வெறியுடன் படித்திருக்கிறார் மாணவன் பிரபு. ’

பிளஸ் டூ தேர்வில் 00-க்கு 476 மதிப்பெண் பெற்ற பிரபு, நீட்தேர்வுக்காக தினமும் 4 மணி நேரம் செலவழித்திருக்கிறார். இவர் நீட் தேர்வுக்கு தனியார் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு எல்லாம் செல்லவில்லை. கடந்த 2 வருடமாக நீட்தேர்வாக தொடர்ந்து பள்ளியில் சிறப்பு வகுப்பில் படித்திருக்கிறார்.

பிரபுவின் இந்த சாதனையை எண்ணி அவரின் பள்ளி மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். தன்னால் எப்படி சாதிக்கமுடிந்தது என்பதை குறித்து பிரபு பகிர்ந்திருப்பதாவது, “என் பெற்றோர்கள் இல்லையென்றால் என்னால் இதை கட்டாயம் சாதித்திருக்க முடியாது. 2 வருடம் இதற்காக கடுமையாக உழைத்தேன்.

என்னால் சாதிக்க முடிந்தது என்றால் என்னை போன்ற மற்ற மாணவர்களாலும் இதை கட்டாயம் சாதித்துக்காட்ட முடியும். தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர்கள் தற்கொலை என்ற செய்திகளை என் பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. முயற்சியை கைவீடாதீர்கள் ஃப்ரண்ட்ஸ் அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே” என்று கூறியுள்ளார்.

பிரபுவின் இந்த பதில், அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...