காஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வரலாற்று முக்கியத்துவமான முடிவை எடுத்துள்ளது, ஜம்மு காஷ்மீரின் வரலாற்றில் புதிய அத்தியாயம், புதியவிடியல் பிறந்திருக்கிறது. வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாமபிரசாத் முகர்ஜி உள்ளிட்டோர் ஒருங்கிணைந்த இந்தியாவை கட்டமைப்பதில் உறுதியாக இருந்தனர்.

சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில், தீவிரவாதத்திற்கும், ஊழலுக்கும் ஊக்களிமளித்துக் கொண்டிருந்த 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான எதிர் காலம் பிரகாசமாகியிருக்கிறது.

காஷ்மீரில் 370, 35ஏ சட்டப்பிரிவுகளால், வன்முறை, ஊழல், பயங்கரவாதம் தான் வளர்ந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது. பயங்கரவாதத்தால் காஷ்மீரில் 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். காங்., சட்டங்களால் அங்கு ஒரு சாரார் மக்கள் மட்டுமே பயன் பெற்று வந்தனர். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம் ஒன்றறை கோடி காஷ்மீர் மக்கள் பயன்பெற போகிறார்கள்.

.

காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன. 1947 க்கு பிறகு பிற மாநிங்களுக்கு உரிமைகள் கிடைத்தது. மற்ற மாநிலங்களை போல், காஷ்மீர் மக்களுக்கும் இனி சலுகைகள் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும். குழந்தைகள், பெண்களுக்கு கல்வி, மருத்துவ வசதி, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். பட்டியலின, பழங்குடி மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். பிரதமரின் கல்வி உதவி தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும். எரிவாயு மானியம், கல்விக்கான மானியம், வீட்டு வசதி மானியங்களை இனி காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்கும். இதுவரை காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும்.

தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், காஷ்மீர், லடாக் உள்ளதால், இனிஊழலின்றி சிறந்து விளங்கும். விமான நிலையம் உருவாக்கம், தரமான சாலைவசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 3 மாதங்களுக்குள் காஷ்மீரில் நிர்வாகம் சீராகும். யூனியன் பிரதேசங்கள் என்பதே தற்காலிகமானதே. மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

ஆயிரக்கணக்கான காஷ்மீர் மக்களுக்கு மறுக்கப்பட்ட ஓட்டுரிமை வழங்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் உருவாகும். காஷ்மீரில் விரைவில் தேர்தல், முழுபாதுகாப்புடன் நடத்தப்படும். காஷ்மீர், லடாக் உள்ளாட்சி தேர்தல்களில் உங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். கவர்னர் ஆட்சியில் காஷ்மீரில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அங்குசென்ற போது, சாலை வசதிகள், மின்சார வசதிகள் மேம்பட்டிருந்ததை கண்டேன்.

பயங்கரவாதம், பிரிவினைவாதத்திலிருந்து காஷ்மீரை நாம் காப்பாற்றவேண்டும். காஷ்மீரில் சாதாரணநிலை திரும்புவதால் இனி சினிமா படப்பிடிப்புகளை நடத்தலாம். ஹிந்தி, தமிழ், தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் காஷ்மீரில் இனி படப்படிப்புகளை நடத்தலாம். காஷ்மீர், லடாக்கில் சுற்றுலாதுறை மேம்படும். அங்கு தகவல் தொழில்நுட்பம், பிபிஓ சென்டர்களும் உருவாகும். காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்துவார்கள். அந்த நம்பிக்கை எனக்குள்ளது.

காஷ்மீர் சால்வை, மூலிகை மருந்துகளை சர்வதேசளவில் சந்தைப்படுத்த முடியும். அந்த மூலிகையின் பயனை உலகமே அனுபவிக்கசெய்வோம். காஷ்மீரில் இருந்து விளையாட்டு வீரர்கள் உருவாகி அவர்கள் விருதுகளை வெல்வார்கள். யூனியன் பிரதேசமானதும் லடாக்கை முன்னேற்றமடைய செய்வது மத்திய அரசின் பொறுப்பு. சோலார் மின் உற்பத்தியில் லடாக் தலை சிறந்த பகுதியாக மாறும்.

காஷ்மீர், லடாக்கின் எதிர்காலத்திற்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும். அவர்களுக்கு துணையாக 130 கோடி மக்கள் உள்ளனர். அவர்களின் உரிமையை யாரும் பறிக்கமுடியாது. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அவர்களும் மாறி வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டில், மாற்றுக்கருத்து உள்ளோரை மதிக்கிறோம். ஆனால் தேச விரோத நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. இனி காஷ்மிரிலும், லடாக்கிலும் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது. காஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம்.

பாக்.,கால் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை போற்றுவோம். ராணுவம், பாதுகாப்புப்படை மற்றும் போலீசார் அங்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்கள். பக்ரீத் பண்டிகையை கொண்டாட அங்குள்ள மக்களுக்கு எந்தசிக்கலும் இருக்காது. காஷ்மீர், லடாக்கை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்; காஷ்மீரின் வாழ்வுசிறக்கும். அம்மக்களின் உரிமை நிலைநாட்டப்படும்; அது அவர்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து, இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சி வாயிலாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...