இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறுவேறு அல்லர்

இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.

மதுரையில் தனியார்விடுதி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இல. கணேசன் தேசிய குடியுரிமை திருத்தசட்டம் குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தேசிய குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, முறையாக நாடாளுமன்றத்தில் மசோதாவாக அறிமுகப் படுத்தப்பட்டு பின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

இச்சட்டத்திற்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடுதான் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் போராட்டம் என்று திசைதிருப்புவது ஏற்கத்தக்கதல்ல.இந்த சட்டத்தில் எங்கும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடப் படவில்லை.

வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள்தான் முக்கியமாகக் குறிப்பிட படுகின்றன. இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறுவேறு அல்லர். ஆகையால் இதுகுறித்து இந்திய இஸ்லாமியர்கள் அச்சம்கொள்ள தேவையில்லை.

இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் தங்களது சொந்த தேசத்திற்கு திரும்புவதையே விரும்புகின்றனர். அவர்கள் இங்குவசதியாக வாழ்வதையும் குடியுரிமை வழங்குவதையும் நானும் வரவேற்கிறேன். ஆனால் என்னை பொறுத்த வரை இங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பவேண்டும்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவரிடம் இஸ்லாமிய மாணவி ஒருவர் நடந்து கொண்ட விதம் மிகத் தவறானது. தலைவர்களின் தவறான வழிகாட்டுதலில் அவ்வாறு நடந்துகொண்டார் என்று நான் கருதுகிறேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்த முறையும் பாஜக – அதிமுக கூட்டணியோடு இணைந்து போட்டியிடுகிறது. மதுரை மாவட்டத்தில் கணிசமான தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. வேட்பாளர்களின் தகுதி, நேர்மை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் இல.கணேசன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...