குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நிரூபிக்க முடியுமா?

நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச்சட்டம் விவாதத்திற்கு பின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பாணையை  வெளியிட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தசட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆமதாபாத்தில் வசிப்பவர்களால் எழுதப்பட்ட 5 லட்சம் கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பும் விழா நடந்தது. இதில் பங்கேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

வார்த்தைக்காக மட்டுமல்லாமல் இதயத்தில் இருந்து எழுதப்பட்ட நன்றிகடிதங்கள் இவை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகபரப்படும் பொய்களுக்கான பதில் தான் இந்த பொதுக்கூட்டம். குடியுரிமை திருத்தசட்டத்தின் மூலம் பிரதமர் மோடி, லட்சக்கணக்கான மக்களுக்கு மனித உரிமைகளை வழங்கியுள்ளார். இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்டமுடியுமா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன்.

தங்கள் மதம் மற்றும்  சுயமரியாதையை காப்பாற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் இந்தியா வருகின்றனர். அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் உள்துறை அமைச்சர், முதல்  ஜனாதிபதி, மகாத்மா காந்தி என அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு யார்வந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என கூறியிருந்தனர். பாகிஸ்தானில் இருந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்கள் வேறு எங்கும் செல்ல முடியாது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும்  சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மாநிலத்தில் உள்ள காங்கிரஸ்கட்சி உறுதியளித்தது. நீங்கள் அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அதை ஏன் எதிர்க்கிறீர்கள்? இது பற்றி 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளில்,  ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் கடிதம் எழுதினார். அதில், இந்துக்கள், சீக்கியர்களை மட்டும் குறிப்பிட்டபோதும், நாங்கள் அதனுடன், பார்சிகள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் கீழ் உள்ளடக்கியுள்ளோம் என்றும் அமித்ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...