நாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்

அடுத்த 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ. 6,865 கோடி நிதியை ஒதுக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்தது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எஃப்.பி.ஓ. என்ற வேளாண் உற்பத்திஅமைப்பிற்கு வேளாண் உற்பத்தி உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு அமைப்பு என்று பெயர் ஏற்படுத்தபட்டுள்ளது. இதுபோன்று நாடு முழுவதும் 10,000 அமைப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக கடந்த 2019 – 20 நிதிநிலை அறிக்கையில் இந்த வேளாண் உற்பத்திஅமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறுவிவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு, தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக்கழகம், நபார்டு (தேசிய விவசாய ஊரக வளர்ச்சி வங்கி) மற்றும் மாநில அரசுகளும் இந்த அமைப்புகளின் உருவாக்கத்தில் பங்கு கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தற்போது உள்ள சவால்களை எதிர்கொள்ள பிரதான்மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பி.எம்.எஃப்.பி.ஒய்) திட்டத்தை வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டு திட்டமாக மறு சீரமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடன்பெறும் விவசாயிகள் கட்டாயமாக பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும் என்று முன்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விதிமுறை தளர்த்தப்பட்டு விவசாயிகள் கடன் பெற்றிருந்தாலும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலானது என்று மாற்ற பட்டுள்ளது.

மேலும், பால்பதனிடும் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை 2 சதவீதம் என்றிருந்ததை 2.5 சதவீதமாக உயர்த்தி அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...