அஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்

அஜ்மீர்தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் (மக்பரா)ஆகும். இவர் கரீப்நவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த அடக்கத்தலம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அஜ்மீர் தர்காவில் வருடந் தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக் கூடு விழா நடைபெறும். கரீப் நவாஸ் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று  புனித போர்வையை அஜ்மீர் தர்காவிடம்  வழங்கினார். இது 808வது உருஸ்விழாவாகும்.  பிரதமர் புனிதபோர்வை வழங்கும் புகைப்படைத்தை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வின்போது மத்திய சிறுபான்மையினர் நலன்  அமைச்சர்  முக்தார் அப்பாஸ்நக்வி உடன் இருந்தார்.

இந்தவிழாவிற்கு வழக்கமாக தலைவர்கள் புனிதபோர்வையை வழங்குவது வழக்கம்.  2015 ஆம் ஆண்டில் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா புனிதபோர்வையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  காஜாமுகையதீன் சிஷ்தி (1141 – 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபிஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்திய துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தபட்டது. பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர். இவர்வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தி யாக்கள் எனப்படுகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...