இந்தியக்குரல்!

1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது! இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது! இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது!

2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் முஸ்லீம்கள் கூட குடியுரிமைக்கு விண்ணப்பித்து பெற்றுள்ளார்கள்! மற்ற நாட்டவர்களும் விண்ணப்பித்து பெற்றுள்ளார்கள்!

3) இப்போதும் உரிய காரணமும் ஆதாரங்களும் இருந்தால் அண்டை நாட்டிலிருந்து வந்து குடியேறிய முஸ்லீம்கள்கூட விண்ணப்பித்து குடியுரிமை பெறலாம்! இப்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் விண்ணப்பித்து குடியுரிமை பெறுவதை யாருக்கும் தடுக்கவில்லை!

4) 1947ல் சுதந்திரத்தை முந்திக்கொண்டு பாகிஸ்தான் பிரிவினை நடந்தபோதும் அதை தொடர்ந்தும், பாகிஸ்தான் பகுதியில் இந்துக்கள் முஸ்லீம்களால் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள்! இந்துஸ்தான் என்னும் இந்திய பகுதியில் இருந்த முஸ்லீம்கள் இந்துக்களால் போற்றி புகழப்பட்டார்கள்! பாகிஸ்தான் பகுதியில் இந்துக்களுக்கு கொடூரங்கள் நடந்ததால், 1950ல் இந்திய பிரதமர் ஜவர்கர்லால் நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஜியாகத் அலி அவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது!

அங்கிருக்கும் இந்துக்களை இங்கேயும் இங்கிருக்கும் முஸ்லீம்களை அங்கேயும் மாற்றிக்கொள்ளலாமா என விவாதிக்கப்பட்டது!

முடிவில் அங்கிருக்கும் மைனாரிட்டிகளான இந்துக்களையும் சீக்கியர்களையும் சமணர்களையும் பௌத்தர்களையும் பார்சிகளையும் கிருஸ்தவர்களையும் பாகிஸ்தான் இஸ்லாமிய அரசு பத்திரமாக பார்த்துக்கொள்வது எனவும், இங்கிருக்கும் மைனாரிட்டிகளான முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் சீக்கியர்கள் சமணர்கள் பார்சிகள் கிருஸ்தவர்களை இந்திய இந்துஸ்தான் அரசு பத்திரமாக பார்த்துக்கொள்வது எனவும் 1950ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

5) இந்திய அரசு தீர்மானத்தை மதித்து பின்பற்றியது! இந்தியாவில் 2 சதவிகிதமாக இருந்த முஸ்லீம்கள் இன்று 12 சதவிகித அளவுக்கு பெருகி வளர்ந்திருக்கிறார்கள்! இந்துக்களின் புனித யாத்திரைக்கு எவ்வித உதவியும் செய்யாத சூழ்நிலையில் மெக்காவுக்கு சென்றுவர அரசு சார்பில் பணம் தருகிறோம்! சட்டத்தில் கூட சலுகைகளை வழங்கிவருகிறோம்!

ஆனால், ஸ்லாமிய பாகிஸ்தானில் மைனாரிட்டி இந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்துப்பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்! இந்து ஆலயங்கள் அடித்து நொறுக்கப்படுகிறது!

பாகிஸ்தானில் 1947ல் 18 சதவிகிதத்தையும் தாண்டி இருந்த இந்துக்களின் எண்ணிக்கை இப்போது 2 சதவிகிதத்திற்கும் குறைவாக போய்விட்டது!

லவ்ஜிகாத் திட்டத்தின்படி இந்துப்பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள்

இந்துக்கள் அங்கே அடித்து கொல்லப்பட்டார்கள்!

சிலர் இந்தியாவுக்குள் ஓடி வந்து தஞ்சம் புகுந்தார்கள்!

6) 31-12-2014 வரை இந்தியாவுக்குள் ஓடிவந்த பாகிஸ்தான் மைனாரிட்டிகளான இந்துக்கள், சிருஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பெளத்தர்கள் ஆகியோர் பயந்து ஓடி வந்தவர்கள் ஆகையால் குடியுரிமை பெற சான்றுகள் சமர்ப்பிப்பதில் அவர்களுக்கு மட்டும் சில சலுகைகள் காட்டப்படும் என்பதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம்! இப்படி வந்தவர்கள் வெறும் 31 ஆயிரம் மட்டுமே!

7) இவர்களுக்கு சலுகை வழங்கி இவர்களை அரசு நிலத்தில் தங்கவைத்து வேலை கொடுப்பதால், இந்திய முஸ்லீம்களுக்கும் காங்கிரசுக்கும் திமுக வுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் என்ன கஷ்டம்?

8) ( 3 வது பாராவை இப்போதும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்)

9) கிட்டத்தட்ட அனாதைப்போல இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்ட இவர்களை ஆதரிக்க வேண்டும் என்று 1947 லேயே காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் போட்டது! மகாத்மா காந்தி வலியுறுத்தி சொன்னார்! 2003 ல் மன்மோகன்சிங் ராஜிய சபாவில் அப்போதைய துணை பிரதமர் அத்வானியிடம் கேட்டுக்கொண்டார்! 2005 ல் மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் இதே கோரிக்கையை வைத்தார்! 2012ல் கம்யூனிஸ்ட் கட்சி கோளிக்கோட்டில் நடந்த செயற்குழுவில் தீர்மானம் போட்டு பிரதமருக்கு இதே கோரிக்கைக்காக கடிதமும் எழுதினார்கள்! அசாம் காங்கிரஸ் கட்சியும் 2012ல் தீர்மானம் போட்டு பிரதமருக்கு அனுப்பியது!

அகதிகளை ஆதரியுங்கள் என்பது மட்டுமல்ல, ஊடுருவல்காரர்களை விரட்டி அடியுங்கள் என்றுதான் மம்தா பாணர்ஜி அன்று நாடாளுமன்றத்தில் பெருத்த கூச்சலிட்டார்!

அன்று யாரும் அன்னிய நாடுகளில் இருந்து வந்த பெரும்பான்மை முஸ்லீம்களையும் ஆதரியுங்கள் என்று கேட்கவில்லை! மைனாரிட்டிகளை ஆதரியுங்கள் என்று மட்டுமே குரல் கொடுத்தார்கள்!

மம்தா, ஊடுருவல்காரர்களின் பெயர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு, இவர்களை இந்த அரசு எப்போது வெளியேற்றப் போகிறது? என கேட்டு நாடாளுமன்றத்தில் 2005ல் பேசினார்!

எல்லோரும் கேட்டதைத்தான் இப்போது பாஜக அரசு செய்திருக்கிறது!

ஆனால், அன்று கேட்டவர்கள் இன்று ஆதரிக்காமல் எதிர்ப்பது ஏன்?

10) நீதிமன்றங்களில் சில வழக்குகளில் வாதியும் பிரதிவாதியும் கடுமையாக சண்டை போடுவார்கள்! சில வழக்குகள் நடந்துக் கொண்டிருக்கும்போதே, வாதியும் பிரதிவாதியும் நீதிமன்றத்திற்கு வெளியே சந்தித்து பேசி பணமாற்றம் செய்துக்கொண்டு வழக்கை முடித்து வைத்து விடுவார்கள்!

சாட்சிகாரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்! என்பார்கள்!

1947ல், 2003ல், 2005ல், 2012ல் வாதம் செய்தார்கள்.

சாட்சிக்காரன் அன்றைய காங்கிரஸ் அரசு!

சண்டைக்காரன் பாகிஸ்தான், பங்களாதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவி கள்ளத்தனமாக குடியேறியுள்ள முஸ்லீம்கள்!

நீதிமன்றத்திற்கு வெளியே பணமாற்றம் எவ்வளவு நடந்தது?

குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஓட்டுப்போடுவது ஒரு ஒப்பந்தமா?

வந்தேறிகளின் வாக்குகளால் தேர்வாகும் மக்கள் பிரதிகள், ஒரு பேரமா?

அன்று வேண்டும் என்று போராடிவிட்டு இன்று வேண்டாம் என்று போராட காரணமாக அமைந்த ஆதாயம் என்ன?

அன்று நீங்கள் கைகளில் வைத்திருந்த ஊடுருவல் பட்டியலில் இருந்த பெயர்கள் இன்று உங்கள் கட்சி உறுப்பினர் பட்டியலில் இருக்கிறதா?

இத்தகைய உறுப்பினர்கள் லட்சத்தை தாண்டுவார்களா, கோடிகளை தாண்டுவார்களா?

இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பத்துகளில் இருக்கிறார்களா? நூறுகளில் இருக்கிறார்களா?

இந்த அன்னிய சக்திகளால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக்கொண்டு, இந்துக்களின் ஒரே தேசத்தையும் மதம் மாற்றிவிடும் திட்டம் எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறதா?

இதுதான் இந்தியர்களின் இன்றைய கேள்வி!

*முஸ்லீம்களுக்கு உலகில் 50 க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன! கிருஸ்தவர்களுக்கும் 50 க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன!

*இந்துக்களுக்கு ஒரே நாடு இந்தியா மட்டுமே!

*இந்தியர்கள் இன்னொரு நாட்டுக்குள் ஆதாரமும் அனுமதியும் இல்லாமல் புகுந்துக்கொள்ள முடியாது என்றிருக்கும்போது, முஸ்லீம்களேகூட இன்னொரு முஸ்லீம் நாட்டுக்குள் அனுமதியும் ஆதாரமும் இல்லாமல் புகுந்துவிட முடியாது என்றிருக்கும்போது,

இந்தியாவுக்குள் மட்டும் அன்னிய நாட்டவர்கள் அனுமதியில்லாமல் புகுந்துக்கொண்டு, ஜனநாயகத்தை பயன்படுத்தி மத அடிப்படை நாடாக மாற்றிவிட, இங்கிருக்கும் இந்துக்கள் தங்களின் ஒரே நாட்டை விட்டுத்தர வேண்டுமா? இதுதான் இன்றைய இந்தியாவின் கேள்வி!

அண்டை நாடுகளில் பெரும்பான்மை முஸ்லீம்களால் விரட்டியடிக்கப்பட்ட அன்னாட்டு மைனாரிட்டிகளை; கருணை அடிப்படையில் அரவணைப்போம்! குடியுரிமை வழங்குவோம்!

ஆனால், நாடுபிடிக்கும் ஆசையில் ஊடுருவும் அன்னிய நாட்டவரை அனுமதிக்க மாட்டோம்! எங்கள் காவல் தெய்வம் மோடியின் கரங்களை பலப்படுத்துவோம்!

இதுவே இன்றைய இந்தியக் குரல்!

————– குமரிகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...