அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாளை (24/02/2020) இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகைதருகிறார். அதிபர் ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் வருகிறார். பிப்.24 மற்றும் 25 ஆகிய இருநாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையேயான உயர்மட்ட பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இருநாட்டு அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தாஜ் மஹால், டெல்லி, அகமதா பாத் உள்ளிட்ட நகரங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதா பாத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்தியவருகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை அகமதாபாத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை ட்ரம்ப் தொடங்கிவைத்து எங்களுடன் இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |