இம்ரானின் கைப்பாவை ஸ்டாலின்

”பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கைப்பாவையாக, ஸ்டாலின் உள்ளார்,” என, பா.ஜ.க, தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் பேசினார்.

கிருஷ்ணகிரியில், பா.ஜ., சார்பில் நடந்த, மாற்றுகட்சியினர் இணையும் விழாவில், அவர் பேசியதாவது:மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், ஸ்டாலின் குறை கூறிக் கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் அதிஷ்டம் இல்லாதவர். 1947ல், பாகிஸ்தானில், 24 சதவீத இருந்த ஹிந்துக்கள், தற்போது, 1 சதவீதமே உள்ளனர்.இந்தியாவில், மசூதிகளின் எண்ணிக்கையை நினைத்துபார்க்க வேண்டும்.

தேசிய குடியுரிமை சட்டதிருத்த மசோதாவால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. இருப்பதாக, ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டுவிலக தயார். பா.ஜ., இருக்கும் வரை, ஸ்டாலின் முதல்வராக முடியாது.முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாக, ஸ்டாலின் பொய்கூறுகிறார். பா.ஜ.,வின் கைப்பாவையாக, அ.தி.மு.க., உள்ளதாக, ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவர்தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக உள்ளார். இவ்வாறு அவர்பேசினார்.சந்தன வீரப்பன் மகள்பா.ஜ.,வில் ஐக்கியம்கிருஷ்ணகிரியில், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா, நேற்று நடந்தது.

பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்தமகள் வித்யா ராணி, பா.ஜ.,வில் இணைந்தார்.வித்யா ராணி பேசுகையில், ”மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதுதான், என் தந்தையின் எண்ணம். அவர் தவறான வழியை தேர்வுசெய்தாலும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், பா.ஜ.,வில் இணைந்துள்ளேன்,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.