இறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க்கிறேன்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய திலிருந்தே டெல்லியில் நடந்தவன்முறை சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பிவந்தனர்.  இந்நிலையில், நேற்று கூடிய அவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வன்முறைச் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றியதாவது .

டெல்லியின் மற்ற பகுதிகளில் கலவரங்கள் பரவாமல் காவல்துறையினர் தடுத்தது பாராட்டுக்குரியது. வன்முறைச் சம்பவங்களை சுமார் 36 மணி நேரத்தில் காவலர்கள் கட்டுப்படுத்தியனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகைதந்தபோது எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ளவில்லை. நாள் முழுவதும் காவல் துறையினருடன்தான் இருந்தேன். வன்முறைகள் தொடர்பாக 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது  2,600-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

`இந்து மற்றும் இஸ்லாமியன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை’ இறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க்கிறேன். நாடாளுமன்றத்தை மதத்தின் அடிப்படையில் பிரிக்க முடியுமா என்ன? காங்கிரஸினர் ஆட்சியின் போது நடந்த கலவரங்களில்தான் 76 சதவிகிதம் இறந்தனர். பிப்ரவரி 25-க்குப் பிறகு கலவரங்கள் நடைபெற வில்லை. இந்தச்சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது”

`குடியுரிமை திருத்தச் சட்டமானது முறையான கலந்துரை யாடலுக்குப் பிறகே ஜனநாயக முறையில் நிறைவேற்ற பட்டது. குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. துன்புறுத்தபடும் மக்களுக்குக் குடியுரிமை வழங்கு வதற்கான விதிமுறைகள் உள்ளன. எனக்கு மத அடிப்படையிலான 25 சட்டங்கள் தெரியும். இஸ்லாமியத்திற்கான சட்டங்கள் தெரியும். எனவே, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச்சட்டம்தான் முதல் சட்டம் எனக் கூறுவது தவறு. இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணிகளைவிட ஆதரவு தெரிவித்து நடந்த பேரணிகளே அதிகம்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...