நீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி விடாமல் இருக்க இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத்தும், அவரது கணவர் பிலிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறி, வின்ட்சர்கோட்டையில் பாதுகாப்பாக உள்ளனர்.
ஆனால் அவர்களது மூத்தமகன் இளவரசர் சார்லசுக்கு (வயது 71) கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 26-ந்தேதி உறுதிசெய்யப்பட்டது. அவரது மனைவியும் இளவரசியுமான கமிலாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் இருவரும் பால்மோரல் எஸ்டேட் மாளிகையில் தனிமை படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது நேற்று உறுதியானது.
இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒருவீடியோ பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் கிறிஸ்விட்டியின் ஆலோசனையின் பேரில் பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
என்னை நான் தனிமைப் படுத்திக்கொண்டு, எனது இல்லத்தில் இருந்துகொண்டு வேலை செய்வேன். அதுதான் செய்யவேண்டிய சரியான செயல் ஆகும்.
என்னால் தொடர்ந்து செயல்படமுடியும். இதற்காக நவீன தொழில் நுட்பத்துக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். தேசியளவில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் நான் எனது குழுவை வழிநடத்துகிற வகையில் தகவல்பரிமாற்றம் செய்து கொள்வேன். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.
போரிஸ் ஜான்சன்தான், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள முதல் உலகதலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபிக்கும் கொரோனா பாதித்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது .
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது குறித்து அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “எண்.10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பரிசோதனையை தேசிய சுகாதாரபணி ஊழியர்கள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ்தாக்கம் இருப்பது உறுதியானது. பிரதமர், தனது இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக போராட காணொலிகாட்சி வழியான சந்திப்புகள் மூலம் அரசின் செயல்பாடுகளை அவர் தொடர்ந்து தலைமை தாங்கி நடத்திச்செல்வார்” என கூறினார்.
பிரதமர் இல்லசெய்தி தொடர்பாளர் கூறுகையில், “பிரதமருக்கான உணவுகள், வேலை செய்வதற்கான ஆவணங்கள் அவரது அறையின் கதவுக்குஅருகே வைக்கப்படும்” என தெரிவித்தார்.
இதற்கிடையே கர்ப்பமாக உள்ள போரிஸ் ஜான்சனின் வருங்கால காதல் மனைவி கேரி சைமண்ட்ஸ், எங்கோ ஒரு இடத்தில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசியாக கடந்த 11- ந் தேதி சந்தித்துள்ளார்.
அவரது நலனையொட்டிய அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றி, ராணி இரண்டாம் எலிசபெத் நலமாக உள்ளார் என்று இங்கிலாந்து அரண்மனை தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் இங்கிலாந்து நாட்டின் சுகாதார மந்திரி மேத் ஹான்காக்குக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ்பாதிப்பில் இருந்து மீண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்தி வெளியிட்டுள்ளார்.
இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்குரிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள்கடந்து வருவீர்கள். உங்கள் ஆரோக்கியத்துக்காகவும், ஆரோக்கியமான இங்கிலாந்தை உறுதி செய்வதற்காகவும் நான்பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...