ஆயுஷ்மான் பாரத் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது

‘ஆயுஷ்மான் பாரத்திட்டத்தால் பயனடைந்த வர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார். மேலும் இது பலரதுவாழ்க்கையில்  நம்பிக்கை ஓளியூட்டிள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 2018 இல், மோடி பிரதமர் ஜன்ஆரோக்கிய யோஜனா- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கினார். இது உலகிலேயே மிகப் பெரிய அரசு ஆதரவுபெற்ற  சுகாதாரத் திட்டம் என்று அழைக்கப் படுகிறது.

இந்த திட்டத்தின் பயனாளர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்க பதிவில், “ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்யும்.

இரண்டு ஆண்டுகளுக்குள், இந்தமுயற்சி பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஓளியை ஏற்றியுள்ளது”என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்திய மோடி அவர்களின் நல் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும், ஆயுஷ்மான் பாரத்திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அனைவரையும் பாராட்டினார், அவர்களின் முயற்சிகளால் இது உலகின் மிகப் பெரிய சுகாதார திட்டமாக அமைந்துள்ளது என்றார்.

“இந்தமுயற்சி பல இந்தியர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்த வர்களுக்கு” நம்பிக்கை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

“பயனாளிகள் தாங்கள் பதிவு செய்த இடத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உயர்தர மற்றும் குறைந்தசெலவிலான மருத்துவ சேவையைப் பெற முடியும். இதனை வீட்டை விட்டு வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்களும் அங்கு பதிவு செய்து பயனைப் பெற முடியும்” என்று விளக்கினார்.

மேலும்,  தனது அதிகாரப் பூர்வ பயணங்களின் போது, ​​ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் தான் உரையாடுவேன் என்றார்.

“துரதிர்ஷ்ட வசமாக, இந்த நாட்களில் அது சாத்திய மில்லை, ஆனால் மேகாலயாவைச் சேர்ந்த பூஜாதாபாவுடன் நான் ஒருசிறந்த தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. இவர்தான் ஒருகோடியாவது பயனாளி,” இவர் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி என்று மோடி கூறினார்.

ஆயுஷ்மான் பாரத்திட்ட வசதியைப் பயன்படுத்தி ஷில்லாங்கில் அவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சை குறித்து ராணுவவீரரின் மனைவி தாபா விளக்கும் உரையாடலின் ஆடியோ கிளிப்பை பிரதமர் பகிர்ந்துகொண்டார்.

அவரது கணவர் மணிப்பூரில் பணியாற்றி வருகிறார். கரோனா ஊரடங்கால் அறுவை சிகிச்சையின்போது அந்த வீரர் தனது மனைவியுடன் இருக்க முடியவில்லை.

அவரது இரண்டு சிறிய குழந்தைகளையும் அக்கம் பக்கத்தினர் கவனித்துக் கொண்டனர்.பிரதமர் மோடி இவரிடம் மேலும் கேட்டபோது, ​​அறுவைசிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம்செலுத்த வேண்டியதில்லை என்று தாபா கூறினார்.

இந்த திட்டஅட்டை இல்லை என்றால், கடன் வாங்காமல் இந்த அறுவைசிகிச்சை நடைபெறுவதற்கான வாய்ப்புகடினம் என்று அவர் கூறினார்.

இதையடுத்து ஆயுஷ்மான் பாரத்திட்டம் குறித்து மோடி பெருமிதம் அடைந்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...