டிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ‘முக்கியமான ஆலோசனைகளை’ நடத்தியுள்ளார்.

இந்திய நேரப்படி நேற்றுஇரவு நரேந்திர மோடியை டிரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது அடுத்து அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட மேலும் சிலமுக்கிய நாடுகளை ஜி7 கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் கூறியுள்ள தகவல்கள்,

அமெரிக்க அதிபரும் எனது நண்பருமான டிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன். ஜி7 உச்சிமாநாடு தொடர்பாகவும் கொரோனா பெருந்தொற்று தொடர்பாகவும் மற்றும் பல்வேறுவிஷயங்கள் பற்றியும் அப்போது நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

செழுமை மற்றும் ஆழம்கொண்ட இந்திய அமெரிக்க நட்புறவு என்பது கொரோனா வைரஸ் காலகட்டத்திற்கு பிறகான உலக கட்டமைப்பின் போது முக்கியமானதாக மாறும். இவ்வாறு நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் சீனா அதிகப்படியான படைகளை குவித்துவருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டிய நிலையில் டிரம்ப் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மோடியும் தனது டுவிட்டர்பதிவில் ஜி7 மாநாடு மட்டுமல்லாது மேலும் பல விஷயங்களை பேசியதாக கூறியுள்ள கருத்து வெளியுறவு நிபுணர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறது.

இந்த உரையாடலும் மோடியின் டுவிட்டர் பதிவும் சீனாவுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...